காணிக்கை இன்று தரவந்தோம் இறைவா வாழ்வைப் பலியாக்க வந்தோம் நாதா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கை இன்று தரவந்தோம் இறைவா

வாழ்வைப் பலியாக்க வந்தோம் நாதா

எமைப் பலியாக்கவே உம் பதம் வருகின்றோம்

கனிவுடன் ஏற்றிடுவாயே கருணை தேவா


1. புழுதி படிந்த கரங்களில் எம் பொன்னான வேர்வைத்துளி

உம் பாதம் எடுத்து வந்தோம் -2

நீலக்கடலில் கரையும் எம் முத்தான குருதித்துளி

பொற்பாதம் கொண்டு வந்தோம் -2

உழைப்பின் உயர் பலன் யாவும் பீடம் வைத்தோம் - 2 உம்

உடலாய் இரத்தமாய் மாறச் செய்வாயே (எம்மை)


2. விடியற்காலை ஏங்கும் எங்கள் விழிகளில் கண்ணீர்த்துளி

உம் பாதம் எடுத்து வந்தோம் -2

இருள் அகலும் ஒளி ஏற்ற யாம் சிந்தும் ஈரத்துளி

பொற்பாதம் கொண்டு வந்தோம் -2

உழைப்பின் உயர் பலன் யாவும் பீடம் வைத்தோம் -2 உம்

உடலாய் இரத்தமாய் மாறச் செய்வாயே (எம்மை)