புதியதோர் உலகம் படைத்திடவே ஒருவரை ஒருவர் அன்பு செய்வோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புதியதோர் உலகம் படைத்திடவே

ஒருவரை ஒருவர் அன்பு செய்வோம்

இறைவனின் அரசைப் பரப்பிடவே

இயேசுவின் அன்பில் நிலைத்திடுவோம்

அவர் காட்டிய பாதையில் நடந்திடுவோம்

வாரீர் கரம்கோர்த்து நாம்

இயேசுவின் சீடராய் வாழ்ந்திடுவோம் (2)


1. நேர்மனம் இழந்த எளியவரை உரிமைகள் இழந்த ஊமைகளை

ஊதியம் இன்றி உழைப்பவரை அடிமை வாழ்வு வாழ்பவரை

தேடியே சென்று தேற்றிடுவோம்

விடுதலை வாழ்வு வழங்கிடுவோம்

வாரீர் கரம்கோர்த்து நம் இயேசுவின் சீடராய் வாழ்ந்திடுவோம் (2)


2. தெருக்களில் திரியும் சிறுவர்களை ஆதரவில்லா விதவைகளை

அடைக்கலம் இல்லா முதியவரை நோயால் வேதனைப்படுபவரை

தேடியே சென்று உதவிடுவோம்

இருப்பதைப் பகிர்ந்து மகிழ்ந்திடுவோம்

வாரீர் கரம்கோர்த்து நம் இயேசுவின் சீடராய் வாழ்ந்திடுவோம் (2)