உமது அரசு வருக எங்கள் இதயமே மகிழ்க மக்கள் வாழ்வெல்லாம் மலர

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உமது அரசு வருக எங்கள் இதயமே மகிழ்க

மக்கள் வாழ்வெல்லாம் மலர

மனித மாண்பு உயர்ந்திட இறைவன் ஆட்சி துலங்கிட


1. மாந்தர் தம்மை வாட்டும் வறுமை ஒழியவேண்டுமே

மகிழ்வு தென்றல் இன்னும் எங்கும் வீச வேண்டுமே

ஏற்றத்தாழ்வு என்னும் நோயும் நீங்க வேண்டுமே

ஏங்கி தேடும் ஒருமைப்பாடு விடிய வேண்டுமே

வேதங்கள் எல்லாம் வாழ்வாக மாறிட

பேதங்கள் எல்லாம் நில்லாமல் ஓடிட

உலகமெல்லாம் ஒரே குடும்பம்

ஏழை வாழ்வு மலரட்டும் ஏங்கும் நெஞ்சம் மகிழட்டும்

இயேசுவின் கனவெல்லாம் நிறைவாகட்டும்


2. கடவுள் தாமே எல்லாருக்கும் தாயும் தந்தையாம்

கவி உலகில் மாந்தரெல்லாம் உடன் பிறந்தவராம்

படைப்பெல்லாம் எல்லாருக்கும் பொதுவுடைமை தான்

பகிர்ந்து வாழ்தல் நமது வாழ்வின் திருக்கடமை தான்

நண்பர்கள் ஆயினும் கன்னியர் ஆயினும்

துன்பங்கள் தேடினும் இன்பங்கள் கூடினும்

அன்பில் வாழும் இறை சமூகமாகணும்

எங்கும் துன்பம் விலகட்டும் தங்கும் இன்பம் பரவட்டும்

இயேசுவின் கனவெல்லாம் நனவாகட்டும்