ஆண்டவர் அவையினில் பாடுங்களே நல்ல

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் அவையினில் பாடுங்களே நல்ல

ஆனந்த கீதங்களே நல்ல ஆனந்த கீதங்களே (2)


1. இதயங்கள் இன்னொலி எழுப்பிடுமே நம்

அவயங்கள் அருளிசை பாடிடுமே (2)

நினைவினில் கீதங்கள் சுழன்றிடுமே ஆ... - 2

அனைவரின் அன்பனை வாழ்த்திடவே


2. மனமென்னும் கோயிலில் தோரணங்கள் - நம்

மகிழ்ச்சியைப் பரப்பிடும் மணியொலிகள் (2)

இதயத்தின் எழுச்சியே தூபப்புகை ஆ... 2

இதயத்தின் அன்பனை வணங்கிடவே