இயேசுவே என் மீட்பனே நீ வருகவே இயேசுவே என் இறைவனே நீ வருகவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே என் மீட்பனே நீ வருகவே

இயேசுவே என் இறைவனே நீ வருகவே

வருகவே நீ வருகவே 2 (2)


1. நீ என் இல்லம் வாழ நான் இன்றும் தகுதி இல்லை

உன் வார்த்தை ஒன்றே போதும் என் ஆத்ம தாகம் தீரும்

நீயே என் வழி என் உண்மையும் உயிரும் - உம்மை

உண்மையில் ஆவியில் இன்றும் என்றும்

கண்டேன் என் இறைவா


2. நீயே என் ஆயன் என்னைத் தூக்கி வளர்த்த தேவன்

நீயே எனக்கு எல்லாம் நான் உன்னைப் பிரிய மாட்டேன்

நீயே என் வழி ... ...