சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும் சுமைகள் சுமந்து சோர்ந்த வாழ்வில் அமைதியைத் தாரும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்

சுமைகள் சுமந்து சோர்ந்த வாழ்வில் அமைதியைத் தாரும் (2)

உணவாய் வந்த தெய்வமே என் உணர்வில் கலந்திடு

உறவில் நானும் வளர்ந்திட உன் அருளைப் பொழிந்திடு


1. ஓடைநீரை நாடிவரும் மானின் நிலையினில்

உயிரின் தாகம் தீர்க்கும் உந்தன் அன்பை எண்ணியே - நான்

ஏங்கினேன் என் இதயம் திறந்தேன் இனிமை சேர்த்திட வா

இயேசுவே உம் பாதம் தொடர்ந்திடவே ஆற்றலை அளித்திட வா

துணையென நீ வருகையில் தயக்கமில்லையே

துயிலும் போதும் நடக்கும் போதும் கலக்கமில்லையே


2. அமைதி உன்னில் காணும்போது வசந்தம் மலருதே

அன்பில் இணைந்து வாழும்போது நிறைவு நெஞ்சிலே - நான்

தேடினேன் உன் வரவில் மகிழ்ந்தேன்

வருந்தும் மனங்களெல்லாம்

இயேசுவே உன் மார்பில் சாய்ந்திடவே பேரருள் பொழிந்திட வா

துணையென...