எந்தன் ஆன்மா தேவனை ஏத்திப் போற்றிடுதே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்தன் ஆன்மா தேவனை ஏத்திப் போற்றிடுதே - 2

என் தாழ்நிலையைப் போக்கினார் நெஞ்சம் மகிழ்கின்றதே

அவரில் நெஞ்சம் மகிழ்கின்றதே ஆ..நெஞ்சம் மகிழ்கின்றதே


1. வல்லவர் அவர் என்னிலே பெரியனப் புரிந்தார் - 2 அதனால்

என்னை எல்லா மாந்தரும் இனி வாழ்த்திப் போற்றிடுவர்

தூயராம் அவர் தாழ்ப்பணிந்தோர்

வழிவந்தார்க்கும் தயை தந்தார் - 2


2. வன்கரம் அவர் நீட்டினார் செருக்குற்றோர் சிதைந்தார் - 2

அவரே வலியோர் தம்மை வீழ்த்தினார்

நெஞ்சில் எளியோர்க்கேற்றம் தந்தார்

பசித்த யாவர்க்கும் நிறைவு ஈந்தார்

செல்வர்க்கெல்லாம் துயர் தந்தார்