ஆவியான தேவனே அசைவாடுமே அருள்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆவியான தேவனே அசைவாடுமே

அருள்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே

வாரும் ஆவியே தூய ஆவியே


1. தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உம்

திருக்கரத்தின் வல்லமையைப் பொழிந்திடுமய்யா


2. ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - என்

சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா


3. தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என்

துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா