குழந்தை இயேசுவே நன்றி பாடுவேன்
எந்தன் நாவிலே புகழ்ந்து பாடுவேன்
நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி நல்ல இயேசுவே
1. பாவப் பிடியில் வாழ்ந்த எமக்குப் பாதை காட்டினாய்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
அமைதி இழந்த எந்தன் வாழ்வில் அமைதி தந்தாயே
உமக்கு நன்றி உமக்கு நன்றி
கேட்கும் போது அனைத்தும் தந்து
தட்டும்போது கதவைத் திறந்து
தேடும்போது உன்னைக் கண்டேனே
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
2. தேடி வந்த தாழ்ந்த மனதை இமயமாக்கினாய்
உமக்கு நன்றி உமக்கு நன்றி
நீதி நாளும் எம்மில் வளர தேவனாகினாய்
உமக்கு நன்றி உமக்கு நன்றி