இறைவனைப் புகழ்வோம் வாருங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவனைப் புகழ்வோம் வாருங்கள்

மறைமக்கள் யாவரும் கூடுங்கள்

எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும்

அவர் பெயர் சொல்லி வாழ்த்துங்கள்

இறைவா இதோ வருகின்றோம் - 2


1. இறைவன் நம்மை தேர்ந்தெடுத்தார்

கறையில் குலமாய் மாற்றி விட்டார் (2)

இருளில் நின்று விடுவித்தார்

அரியதம் ஒளிக்கு நமை அழைத்தார்


2. அன்று நாம் இறைவன் மக்கள் இல்லை

இன்றவர் புதல்வர் யாரில்லை (2)

அன்று நாம் இரக்கம் அறியவில்லை

இன்றவர் இரக்கம் யாருக்கில்லை