இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார் சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்

சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே

தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார்

சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே (2)


1. மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே

ஏழையின் குடிசையிலே பிறந்தவனே (2)

தேவதூதன் சொன்ன செய்தியிது

பாவம் போக்க வந்த தெய்வமிது

எல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடி

பாலனின் பிறப்பில் அக்களிப்போம்


2. காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழா

இறைமகன் தொழுவத்திலே பிறந்ததால் (2)

விண்மீன் காட்டி தந்த வழியுமிது

மண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிது

ஆடுவோம் நாமும் ஆடிப்பாடி

நாடுவோம் அவரின் அருளைத் தேடி