கடவுள் இந்த உலகினுக்களித்த காணிக்கை அன்பு காணிக்கை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கடவுள் இந்த உலகினுக்களித்த காணிக்கை

அன்பு காணிக்கை (2)

அன்னை மரியின் வயிற்றில் பிறந்த மைந்தன் காணிக்கை

தெய்வ காணிக்கை (2)


1. மனித உறவினை விரும்பிய இறைவன்

மைந்தனைத் தந்தான் காணிக்கை (தன்) 2

புனித அன்பின் வெளிப்பாடாக

புதல்வனைத் தந்தான் காணிக்கை (தன்) 2

இறைவன் தந்தான் காணிக்கை

உளம் எண்ணி வியக்கும் காணிக்கை (2)

இயேசுவே அந்த காணிக்கை

விலைமதிக்க இயலா காணிக்கை (2)


2. காணிக்கை தந்த இறைவனுக்கு

கைமாறென்ன செய்திடுவோம் (நாம்) 2

ஊனுடல் தந்த இயேசுவுக்கு

உவந்திட என்ன தந்திடுவோம் (அவர்) 2

இறைவன் நமது தந்தை என்று வாழ்வது நமது காணிக்கை -2

இயேசு வாழ்வின் ஒளியென காட்டி பகர்வது இதய காணிக்கை -2