ஆவியிலே புதுமை அடைவோம் - அருள் ஆழியிலே மூழ்கிக் களிப்போம்


ஆவியிலே புதுமை அடைவோம் - அருள்

ஆழியிலே மூழ்கிக் களிப்போம்

இயேசுவுக்கு சான்று பகர்வோம் - அவர்

சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம்


1. அன்பு என்னும் ஆடையணிவோம் - நல்ல

ஆனந்த அமைதி அடைவோம்

ஆதி சபை வாழ்க்கையினை ஆண்டவரின் ஆவியிலே

வீதியெங்கும் கண்டு களிப்போம்


2. வேதனையாம் அலைகள் ஓங்கலாம் - பெரும்

சோதனையாம் புயலும் வீசலாம்

இறைவன் நம்மைக் காக்கின்றார்

இன்பமுற அழைக்கின்றார்

நிறைவாழ்வு இன்று அடைவோம்


3. பிரிவினையாம் நோய்கள் தீரும் - இனி

குறுகிய நம் பார்வை மாறும்

இறையரசின் கொடைகளையும்

புனித அருங்குறிகளையும்

இல்லங்கள் கண்டு மகிழும்