தீப ஆரத்தி திருவடி நான் கொணர்ந்தேன் திளைத்திடும் தூப புகையில் தினம் என்னை அளிக்கின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தீப ஆரத்தி திருவடி நான் கொணர்ந்தேன்

திளைத்திடும் தூப புகையில் தினம் என்னை அளிக்கின்றேன் (2)

ஏற்றிடுவீர் என் இயேசுவே மாற்றிடுவீர் என் வாழ்வையே -2


1. பகைமையும் பசியும் மறைந்திட

படைத்தாய் கோதுமை மணியும் (2)

படைப்பின் பொருளை உணர்ந்து பலிபீடம் வந்தேன் இன்று -2

ஏற்றிடுவீர் ... ... ...


2. பதவியும் பணமும் ஒழிந்திட பலியானாய் பரமனே நீயும் -2

படைப்பின் பொருளை உணர்ந்து பலிபீடம் வந்தேன் இன்று -2

ஏற்றிடுவீர் ... ... ...