ஓ இயேசுவே நான் பாடுவேன் உனக்காகப் புகழ் கீதங்கள் நீயே என் வாழ்வின் ஜீவன் அருள்மாரி பொழிகின்ற தேவன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஓ இயேசுவே நான் பாடுவேன் உனக்காகப் புகழ் கீதங்கள்

நீயே என் வாழ்வின் ஜீவன் அருள்மாரி பொழிகின்ற தேவன்


1. அழியாத உணவு அன்பான உறவு

என் உள்ளம் தேடி வருகின்றது (2)

ஒரு ஜோதி ஏற்றிடும் சிறு தீப ஒளியாக

உன் அன்பில் என் அன்பு பகிர்ந்திடுமே (2)


2. பலியான தேவன் உணவாகும் போது

உலகோடு இறைவன் உறவாகின்றார் (2)

உணவாகும் தேவனில் உறவாடும் நெஞ்சமோ

உயிர்ப்பினைக் காணும் உண்மையன்றோ (2)