என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி நன்றியுடன் மகிழுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி

நன்றியுடன் மகிழுவேன்

இன்னல் யாவும் அகன்ற புதுமை

மன்னர் அவர் மகிமையே

பிறந்தார் இயேசு பிறந்தார்

உதித்தார் மனதில் உதித்தார்


1. மனிதன் வாழ உலகில் தேவன்

மகிமை யாவும் துறந்தார்

இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு

பெறவே இயேசு பிறந்தார்

கனிவாய் நமது இதயம் தேடி

இதமாய் வந்து அமர்ந்தார்


2. கவலை என்னை அணுகும் போது

துணையாய் தாமும் வருவார்

புயலாய் துயரம் வாழ்வில் வீசும்

அருகில் நின்று காப்பார்

இமைகள் கண்ணைக் காக்கும் தேவன்

அது போல் என்னைக் காப்பார்