விண்முடி தாங்கிய விமலியே தாயே மண்ணக மாந்தர்கள் பாடியே புகழ்வோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விண்முடி தாங்கிய விமலியே தாயே

மண்ணக மாந்தர்கள் பாடியே புகழ்வோம் (2)

உன் நாமம் வாழ்த்துவோம் உன் துணை வேண்டுவோம்

அம்மா எந்நாளும் வழிநடத்தும் (2)


1. மண்ணோரின் மேல் கொண்ட பாசத்தால்

உம் மகனையே எமக்காய் கையளித்தாய் (2)

அமைதியின் கருவியாய் நின்று

அகிலத்தைக் காக்கின்றாய் (2)

அம்மா என்றும் உந்தன் அன்பினில்

எமையே அணைத்திடுவாய்


2. இறைவனின் வார்த்தை இதயத்தில் ஏற்று

இகமதில் வாழ்ந்த இறையன்னையே (2)

இறைமக்கள் எமக்காய் இறைஞ்சுமம்மா

இறை அன்பை வளர்த்திட உதவுமம்மா (2)

இறையருள் எம்மில் வளர்ந்திட என்றும் உதவுமம்மா