ஒரு குலமாய் ஓரினமாய் வாழ இறைவன் அழைக்கின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு குலமாய் ஓரினமாய் வாழ இறைவன் அழைக்கின்றார்

உலகில் ஜாதி பேதமின்றி ஒன்றி வாழ அழைக்கின்றார்

ஒரு மரம் தோப்பாவதில்லை உலகறிந்த உண்மையே

ஒன்றுபட்டு உழைப்பதாலே உண்டு என்றும் நன்மையே


1. சமுதாய வாழ்வில் நமது ஈடுபாட்டை உணருவோம்

சமய மொழி பண்பாடு தன்னில் சமத்துவத்தை நாட்டுவோம்

நமது அறிவு ஆற்றலோடு நாடும் தொழில் நுட்பமும்

நமது வாழ்வை வளப்படுத்தும் அருட்கொடையாய்க் காட்டுவோம்


2. போர் வெறியைத் தூண்டுகின்ற ஆயுதங்கள் ஒழிந்திட

பூரணமாய் அமைதி வாழ்வில் பொழிந்தே உலகம் ஒளிர்ந்திட

பார் முழுதும் இறையரசின் மாண்பு யாவும் மலர்ந்திட

பரமன் அன்பில் மாந்தர் எவரும் பரிவுடனே வாழ்ந்திட