அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன் இப்போது உன்னைத் தேடி வந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன்

இப்போது உன்னைத் தேடி வந்தேன்

இறைஞ்சுகிறேன் இரக்கம் வையும் ஏற்றருளும் இறைவா


1. செல்வத்தைப் புகழ்ந்தேன் ஏழ்மையை இகழ்ந்தேன்

உன்னை இழந்தேன் ஊதாரி ஆனேன் (2)

பெற்றோரின் பெருமையை மறந்தே திரிந்தேன் -2

பாவங்கள் அனைத்திலும் உழன்றே நொந்தேன்


2. தந்தை உன் அன்பை ஏற்றிட மறந்தேன்

மந்தையைப் பிரிந்த செம்மறி ஆனேன் (2)

நிந்தனை புரிவோர் வழியில் கலந்தேன் -2

உந்தனை நினைத்தேன் திரும்பி வந்தேன்


3. பாவத்தின் சுமையை இன்றுதான் உணர்ந்தேன்

பண்புள்ள தந்தாய் அண்டி வந்தேன் (2)

கதியென்று செல்ல வேறிடம் இல்லை -2

கையேந்தி கேட்கிறேன் உந்தன் பிள்ளை