கன்னிமரி பாலனாய் அன்றொரு நாள் பெத்தலையில் பிறந்தார் கர்த்தரின் மைந்தர்


கன்னிமரி பாலனாய் அன்றொரு நாள்

பெத்தலையில் பிறந்தார் கர்த்தரின் மைந்தர்

முத்து முத்தாகத் திகழ்ந்தார்


1. நெஞ்சங்கள் ஓ ஒன்றாகி ஆ ஆனந்தம் கொண்டாடுதே

வானுலகும் பூவுலகும் மலர்களைப் பொழிந்தாடுதே ஓ

நாளெல்லாம் இறைமகனின் அன்பும் ஒலித்திடுமே

பாரெல்லாம் அவர் அருளை தினம் தினம் உணர்ந்திடுமே


2. இன்னல்கள் ஓ இந்நாளில் ஆ காற்றோடு பறந்தோடுதே

இனியவராய் மீட்பருமாய் மன்னரும் வந்தாரன்றோ ஓ

பேதங்கள் இனியில்லையே பகையும் மறைந்திடுதே

நாமெல்லாம் அவரன்பால் ஒருவராய் இணைந்திடுவோம்