திருவெளிப்பாடு பரிசுத்த வேதாகம் பகுதி-2

உலகத்தில் ஆண்கள், பெண்களின் ஆன்மாக்களைக்கெடுக்கும் கெட்ட அரூபிகள் சுற்றிவருகின்றன. ஆகவே நம் ஆன்மாக்களை பாதுகாத்துக்கொள்வோம்.பாதுகாத்துக்கொள்ளாதவர்களுக்கு என்ன நேரும் என்பதை திருவெளிப்பாட்டில் காண்போம்.

பின்னர் இதோ ஒரு வெண் மேகத்தையும், அதன் மேல் மனுமகனைப்போன்ற ஒருவர் வீற்றிருப்பதையும் கண்டேன். அவர் தலையில் ஒரு பொன் முடியும், கையில் கூரிய அரிவாளும் இருந்தன.

மற்றொரு வானதூதர் ஆலயத்தினின்று வெளி வந்து, மேகத்தின்மீது வீற்றிருப்பவரை நோக்கி, உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறவடைக் காலம் வந்துவிட்டது; மாநிலப் பயிர் முற்றிவிட்டது' என்று உரக்கக் கத்தினார்.

மேகத்தின்மீது வீற்றிருந்தவர் தமது அரிவாளை மாநிலத்தின்மீது வீசினார். மாநிலமும் அறுவடையாயிற்று.

வேறொரு வானதூதர் விண்ணிலுள்ள ஆலயத்திலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூரிய அரிவாள் இருந்தது.

இன்னுமொரு வானதூதர் பீடத்தினின்று வெளிவந்தார். அவர் நெருப்பின் மேல் அதிகாரம் உள்ளவர். கூரிய அரிவாள் ஏந்தியவரைப் பார்த்து 'உம் கூரிய அரிவாளை எடுத்து மாநிலத்தின் திராட்சைக் குலைகளைக் கொய்துவிடும்; கனிகள் பழுத்துவிட்டன' என்று உரக்கக் கத்தினார்.

ஆகவே, வானதூதர் மாநிலத்தின் மீது தம் அரிவாளை வீசி, மாநிலத்திராட்சைக் கொடியின் குலைகளைக் கொய்தார். கடவுளது கோபம் என்னும் பெரிய ஆலையில் அவற்றைப் போட்டார்.

நகருக்கு வெளியே உள்ள ஆலையிலே அவை மிதிக்கப்பட்டன. அந்த ஆலையினின்று பாய்ந்த இரத்தம் குதிரைகளின் கடிவாள உயரமளவு இருநூறு கல் தொலைவுக்குப் பாவியது.

திருவெளிப்பாடு 14 : 14 முதல்

இயேசுவுக்கே புகழ் !