ஜெபமாலை சிந்தனைகள் 24: ஜெபமாலையால் விளையும் நன்மைகள் 2..

தேவ இரகசியங்களைத் தியானித்துக்கொண்டு சொல்லப்படும் ஜெபமாலையால் கீழே வரும் வியப்பிற்குரிய நன்மைகள் விளைகின்றன.

1. இயேசு கிறீஸ்துவைப்பற்றிய முழுமையான அறிவை கொஞ்சம் கொஞ்சமாக ஜெபமாலை நமக்குள் ஊட்டுகிறது.

2. நம் பாவங்களைக் கழுவி நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகிறது

3. நம் எல்லா எதிரிகளின்மீதும் வெற்றியளிக்கிறது.

4. புண்ணியப் பயிற்சியை எளிதாக்குகிறது.

5. நமதாண்டவர் மீது அன்பால் நம்மை பற்றியெறியச் செய்கிறது.

6.வரப்பிரசாதங்களாலும் பேறுபலன்களாலும் நம்மை செல்வந்தராக்குகிறது.

7. கடவுளுக்கும் நம் அயலாருக்கும் நாம் செலுத்த வேண்டியவற்றைச் செலுத்த உதவுகிறது. அத்துடன் எல்லாம் வல்ல கடவுளிடமிருந்து எல்லா வகையான அருளையும் பெற்றுத்தருகிறது.

நமதாண்டவரின் வாழ்வு, மரணம், பாடுகள், மகிமை இவற்றை தியானிப்பதால் சேசுவைப் பற்றிய அறிவை நமக்குத் தருகிற ஜெபமாலை ஆசீர் பெற்றதல்லவா?

நன்றி : தலை வெள்ளி, முதல் சனி பக்தியும், ஜெபமாலை பக்தி அனுசரிக்கும் முறையும் புத்தகம், மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகாயமாதா பட்டனம், தூத்துக்குடி.

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம்.. ஜெபிப்போம்.. ஜெபமாலை.. இயேசுவின் இரத்தம் ஜெயம் !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !