கிறிஸ்மஸ் கால சிந்தனைகள் -21 : “பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர். தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.” மத்தேயு 2:11

“இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.” லூக்காஸ் 1:48

கிறிஸ்து பிறப்புக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது.. ஓரளவு எல்லாருமே தயாராயிருப்போம்.. புத்தாடைகள் வாங்கியிருப்போம். கிறிஸ்மஸ் இரவு திருப்பலிக்கு செல்லவேண்டும்.. கிறிஸ்து பிறப்பு விழாவை எப்படியெல்லாம் கொண்டாடுவது… என்று ஒரு பிளான் பன்னியிருப்போம்..அன்று என்னென்ன சமையல் செய்வது, யாரையெல்லாம் அழைப்பது,,, யாருக்கெல்லாம் வாழ்த்துக்கள்.. யார் வீட்டுக்கு செல்வது எப்படி எத்தனையோ திட்டங்கள் தீட்டியிருப்போம்…

எல்லாவற்றையும் விட திவ்ய பாலன் இயேசுவோடும், நம் தூய திருக்குடும்பத்தோடும், நம் காவல் தூதர்களோடும், தேவ தூதர்களோடும் மகிழ்ச்சியாக மகிமையாக, உண்மையான என்றும் மாறா சந்தோசத்தோடு எப்படி கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட இருக்கிறோமா? என்றும் பார்க்க வேண்டும்.. என் உள்ளத்தில் பிறக்கும் திவ்ய பாலனை என்றும் என் உள்ளத்தில் வைத்திருப்பேன்.. அவரை வெளியே விட மாட்டேன்… நான் சாகும்வரை அவரை என் நெஞ்சில்..என் தோளில் நான் சுமப்பேன்… என்று முடிவெடுப்போமா?

அவரை யாரெல்லாம் தோளில் சுமந்தார்கள்… முதலில் மகா பரிசுத்த தேவமாதா,

தேவ அன்னை : “ தாயின் மடிதான் உலகம் அவள் தாழைப் பணிந்திடுவோம்… அவள் சேயின் வழிதான் மோட்சம் நம் சேசுவைத் தொழுதிடுவோம்”.. என்ற பாடல் போல உலகத்தின் இரட்சகருக்கே மோட்சமாக திகழ்ந்தவர் நம் தூய அன்னை… மோட்சத்தை சுமந்த மோட்சம் என்று சொல்லலாம்.. தன் கன்னிமை குன்றா உதிரத்தில் சுமந்த பரிசுத்தத்தாய்.

சர்வேசுவரனை தோளில் போட்டு தாலாட்டவும், சீராட்டவும், பாலூட்டவும், உணவு கொடுக்கவும் முழுதகுதி பெற்ற கடவுளின் பிரமானிக்கமுள்ள் மோயிசனின் முட்செடி, உடன்படிக்கைப்பேழை, புதிய ஏவாள்.. கடவுளின் பரிசுத்த நகரம்.. கடவுள் வாழ்ந்த வாழும் ஆலயம்…

சர்வேசுவரனிடம் எப்படி கடவுளுக்கு பிரமானிக்கமாய் இருப்பது என்பதையும், அவருக்கு எப்படி கீழ்ப்படிவது என்பதையும் தன்னுடைய 'ஆழ்ந்த தாழ்ச்சி ' என்ற புணணியம் முதல்

' உயிருள்ள விசுவாசம் ' 'பற்றியெரியும் தேவஸ்நேகம்', போன்ற பல புணணியங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்து மேலும் கடவுளுக்கு அடிமையாக வாழ்வது.. அவரின் சித்தம் ஒன்றையே நாடுவது; எப்போதும் அவரைப்பற்றியே தியானிப்பது…என்று நம் தேவதாயாரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்..

திவ்ய பாலன் இயேசு நிம்மதியாக உறங்கியது. இந்த அன்புத்தாயின் மடியில்தான்.. நம் தோளில் தூய பாலன் இயேசு நிம்மதியாக உறங்க இந்த அன்புத்தாயின் துணையை நாட வேண்டும்..

“இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.” என்ற அவர்களைப் புகழ வேண்டும். அனுதினமும் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.. அன்னையைப்போல் துணிச்சலாக சோதனைகளை அனுக வேண்டும்.. அந்த நேரத்தில் அன்னையை அழைக்க வேண்டும்.. அந்த மாசற்ற இருதயத்திற்கு நம்மையே அர்ப்பணித்து வாழ வேண்டும்…

(குறிப்பு : கத்தோலிக்கர்கள் அன்னைத்தூக்கி பிடிக்கிறார்கள் அன்னைக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.. ஜெபமாலை சொல்கிறார்கள்.. என்று சொல்பவர்களுக்குத்தான் மேலே உள்ள இரண்டு இறைவார்த்தைகளும். தலைமுறை என்று ஒன்று இருந்தால் அன்னையை வாழ்த்தித்தானே ஆக வேண்டும் ஜெபமாலை ஜெபித்துத்தானே ஆக வேண்டும்… )

நம் புனித சூசையப்பர் : கடவுளையே காப்பாற்றியவர். அவரை தூக்கிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போனவர். அவருக்கு தன் உழைப்பால் சோறு போட்டவர். நமக்கு உணவாக வந்த தெய்வத்திற்கே உணவு கொடுத்தவர். பாலன் இயேசு அழும்போது அவரைத் தன் தோளின்மீது போட்டு தட்டிக்கொடுத்து தூங்க வைத்தவர். பாலன் இயேசுவால் “ அப்பா” என்று அன்பாக அழைக்கப்பட்டவர்..அதனால்தான் அவர் பிதாப்பிதா என்று அழைக்கப்படுகிறார்… சாத்தானை நடுநடுங்க செய்பவர்.. பார்த்தால் அப்புறாணி போல் தோன்றுவார்.. மாதாவுக்கு அடுத்த வல்லமையைப் பெற்றவர்..

பைபிளில் புனித சூசையப்பரைப்பற்றி ஒரே வார்த்தையில் நீதிமான் என்று குறிப்ப்பிட்டிருந்தாலும் அதற்குப்பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.. ஆயிரமயிரம் நற்செயல்கள் உள்ளன.. என்பதை அதை எழுத வைத்த பரிசுத்த ஆவியானவருக்குத் தெறியும்.. அன்னைக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் அவர்தான்.. நம் தாய் திருச்சபையின் பாதுகாவலர் அவர்தான்.. திருக்குடும்பத்தின் தலைவர் அவர்தான்.. நாமும் நம் குடும்பத்தை புனித சூசைமாமுனியின் கரங்களில் ஒப்புக்கொடுப்போம்… திருக்குடும்பத்தை எப்படி போற்றிப் பாதுகாத்தாரோ.. அதைப்போல் நம் குடும்பத்தையும் பாதுகாப்பார்.. சூசையப்பர் தோளிலும் திவ்ய பாலன் நிம்மதியாக எந்தக் கவலையுமில்லாமல் தூங்கினார்..

அடுத்து புனித அந்தோனியார் : பாலன் இயேசு மாதாவுக்கும், சூசையப்பருக்கும் மட்டும்தான் சொந்தம், அவர்களுக்கு மட்டும்தான் அவர் சொத்து என்பதை தன் புனித வாழ்க்கையால் மாற்றிக்காட்டினார்.. நாமும் நம் புனித வாழ்க்கையால், நம் ஆன்மாவின் பரிசுத்தத்தால், நம் பரித்தியாகத்தால் பாலன் இயேசுவை சுமக்க முடியும் என்று நமக்கு மாதிரி காட்டியுள்ளார்.. நாமும் அவரைப்போல் கற்பில் உத்தமமாகவும், நம் ஆன்மாவை லீலி மலர் போலும் வைத்திருந்தால் நம் தோளிலும் திவ்ய பாலன் விளையாட வருவார்.. நம்மாலும் அவரைக் கொஞ்சமுடியும்… என்று புனித வாழ்க்கை என்றால் என்ன.. பரித்தியாக வாழ்க்கை என்றால் என்ன என்று உலகுக்கு காட்டிய உபவாசத்தின் கண்ணாடி புனித அந்தோனியார்.. அவர் தோளிலும் திவ்ய பாலன் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு நிம்மதியாக உறங்கியிருப்பார்.. தன் சிறிய வயதிலேயே சாத்தானின் சோதனைகளை எளிதாக முறியடித்தவர்…

(அவர் இடுப்பில் ஜெபமாலை தொங்கும்…ஜெபமாலை பக்தியில் உறுதியாக இருந்தார் என்பதற்கு அதுதான் சான்று.. மூன்று அருள் நிறை மந்திர பக்தியை அதிகமாக பரப்பினார்.. திவ்ய நற்கருணை நாதர் மேல் எந்த அளவு விசுவாசமும் பக்தியும் வைத்திருந்தார் என்பதற்கு கழுதைப் புதுமை நல்ல உதாரணம்… நமக்கு அந்த கழுதை அளவுக்காவது திவ்ய நற்கருணை நாதர் மீது விசுவாசம் இருக்கிறதா?)

ஜெபம் : வாரும் திவ்ய பாலனே எங்கள் தோளிலும் வந்து விளையாடும்… நிம்மதியாக தூங்கும்… உமக்கு நாங்களும் அந்த சந்தோசத்தை நாங்கள் பாவமில்லாமல், பகையில்லாமல், யார் மீது வெறுப்பில்லாமல் வாழ்ந்து உமக்கு தருகிறோம்…

எங்கள் ஜெபதவபரிகார வாழ்வால் உம்மை மகிமைப்படுத்துவோம்… அட்லீஸ்ட் பாவமில்லாத வாழ்க்கையாவது மகிழ்ச்சியோடு வாழ்ந்து உம்மை பத்திரமாக பார்த்துக்கொள்வோம்… வாரும் சேசு பாலனே வந்து எங்களோடு தங்கும்.. திவ்ய நற்கருணையில் திவ்ய பாலனாகவும், கல்வாரி நாயகனாகவும் வந்து என்னோடு எங்களோடு தங்கும்…

“குளிரும் பனியும் கொட்டினிலே.. பூமகனோ தொட்டினிலே… ஆரீரோ…ஆரீரோ..ஆரிராரோ…ஆராரோ..ஆராரோ…ஆரிராரோ…

தூங்கு… தூங்கு… பாலானி…தூங்கு தூங்கு… பாலனே…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !