ஆண்டவரே என் ஆற்றலாய் 18

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே

உமக்கே நான் அன்பு செய்கின்றேன் (2)

அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்

அவரே என் கேடயம் வலிமையும் துணையும் (2)


1. என் துன்ப நாளில் பகைவகள் தாக்க

என் அன்பு தேவன் அடைக்கலமானார் (2)

நெருக்கடியில்லாத இடத்திற்கு அழைத்தாரே

நேரிய அன்பு கூந்தென்னைக் காத்தாரே - 2


2. வலிமையைக் கச்சையாய் அணிந்தவர் அவரே

வழியையும் நலமாய் ஆக்கினார் அவரே (2)

எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க

எந்நாளும் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக - 2