என் கர்த்தரே என்னரசே 145

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் கர்த்தரே என்னரசே - 2

உம்மைப் புகழ்ந்து பாடுவேன் -2

உம் பெயரைப் போற்றுவேன் -2

நாள்தோறும் உம்மை வாழ்த்துவேன்-2


1. ஆண்டவர் மாண்பு மிகுந்தவர் -2

புகழ்ச்சிக்கென்றும் உரியவர் -2

அவர் வல்ல செயல்களை -2 ஊழிஊழி காலமும் -2

எல்லோருக்கும் எடுத்துரைப்பேன் -2

கனிவு இரக்கம் உள்ளவரே -2 பேரன்பு கொண்டவரே -2

எல்லாருக்கும் நன்மை செய்வீர் -2 பரிவு இரக்கம் காட்டுவீர் -2

உம் படைப்பைக் காத்திடுவீர் -2

உமது அரசு என்றென்றும் -2 உமது ஆளுகை எப்போதும் -2

நிலைத்தென்றும் உள்ளதே -2 உமது மாட்சிமைப் பேரொளியை-2

எடுத்தென்றும் சொல்லுவேன் -2