முதல் சனி பக்தி தாழ்ச்சி

மூவொரு கடவுளுக்கு பிரியமுள்ள மகளாகவும், தாயாகவும், உத்தம பத்தினியாக திகழும் நம் தாய் மாமரி  தாழ்சியின் பொக்கிஷமாக இருக்கிறார்கள் கடவுளுக்கு மிகவும் பிரியமாகவும் இருக்கிறார் நமக்கு இணைமீட்பராகவும் பாசமுள்ள அன்னையாகவும் நம்மை ஒவ்வொரு நாளும்  இறைஅன்பில் வழிநடத்துகிறார்கள்  கபிரியல் சம்மனசானவர்  அருள் நிறைந்த மரியாயே வாழ்க ஆண்டவர் உம்முடனே  என்று உரைத்தார்  அப்போதும் நம் அன்னையின் தாழ்ச்சி கடவுளை மகிழ்சியால் வியக்க வைத்தது  இதோ உங்கள் அடிமை உம் வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் என்ற அந்த தாழ்ச்சியும்  நம் மாமரித்தாயின் சிறப்பு  தாழ்ச்சியின் முழு வடிவமாகவே நம் அன்னை போன்று வேறு யாரால் முடியும்  இன்று பரலோக பூலோக அரசியாகவும்  கடவுள் உயர்த்தியிருப்பதும் அன்னையின் தாழ்ச்சியே  நம் அனைவரும் நம் அன்னையிடம் தாழ்ச்சி என்னும் வரம் கேட்டு கபிரியல் தூதர் மங்கள வார்த்தை சொன்னதை இன்றைய முதல் சனி பக்தி நாளில் தியானித்து  அன்னையின் வழியாக மூவொரு கடவுளிடம் தாழ்ச்சி என்னும் வரம் கேட்டு ஜெபிப்போம் 

இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க