ஆண்டவரின் உயிர்ப்பு : “விசுவாசத்தின் தாய் – மகா பரிசுத்த தேவ மாதா“

"உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான்.

அருளப்பர் 11:25.

ஆண்டவர் உயிர்த்தெழுவார் என்று உண்மையிலேயே விசுவசித்தது யார்? அதில் வெற்றியும் பெற்றது யார் ?

ஆண்டவர் இயேசு பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அப்போஸ்தலர்கள் என பெயரிட்டு கல்லூரி படிப்பு போல மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுத்தார். மேலும் அவர்களிடம் மனுமகன் பாடுகள் படவும், மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் என்று மூன்று முறை தெரிவித்தார்.

அவர்கள் விசுவசித்தார்களா?

"இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப்படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு, அவரை எள்ளி நகையாடவும் சாட்டையால் அடிக்கவும் சிலுவையில் அறையவும் புறவினத்தாரிடம் கையளிப்பர். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்"

மத்தேயு 20 : 18-19

இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்த லாசரை ஆண்டவர் உயிரோடு உயிர்ப்பித்தும் அந்த மார்த்தாள், மரியாள் சகோதரிகள் விசுவசித்தார்களா?

மற்ற மரியாள்களும், யாகப்பர்-அருளப்பரின் தாயாரான சலோமியும் விசுவசித்தார்களா?

அல்லது ஆண்டவர் எத்தனையோ வல்ல செயல்கள் செய்தும், மூன்று பேரை உயிர்ப்பித்தும் அந்த யூதர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள், தலமைக்குருக்கள் இயேசுதான் கடவுளின் மகன் என்று ஏற்றுக்கொண்டார்களா? விசுவசித்தார்களா?

இல்லையே….

புதிய ஏற்பாட்டில் விசுவாசத்திற்கு ஒரே ஒரு உதாரணம் மாதா…மாதா..மாதா.. மட்டும்தான்..

விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம் என்றால்.. விசுவாசத்தின் தாய் மாதா மட்டும்தான்… அதுவும் மாதா ஆபிரகாமைவிட பெரியவர்கள்…

மாதாவின் விசுவாசத்திற்கு சில உதாரணங்கள் :

“ ஆதலின் பிறக்கும் இத்திருக்குழந்தை கடவுளின் மகன் எனப்படும் “

ஆனால் அவர் பிறக்க யாரும் இடம் தர மாட்டார்கள்.

“ அவர் மேன்மை மிக்கவராய் இருப்பார் “

ஆனால் அவர் மாட்டுத்தொழுவத்தில் தீவனத்தொட்டியில் பிறப்பார்.

“ உன்னதரின் மகன் எனப்படுவார் “

அனேக மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.

“ அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார் “

ஆனால் அவர் சிலுவையில் தொங்குவார்.

“ அவரது ஆட்சிக்கு முடிவே இராது”

ஆனால் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவார்..

“யார் என் தாய்? யார் என் சகோதரர்கள் ? என்று தன் தாயைப் பார்த்து கேட்பார்..

அதைக்கேட்டும் அந்தத்தாய் மவுனமாக இருப்பார்கள்..

ஆண்டவரை அடக்கம் செய்த பின்பு மகதலேன் மரியாள் மற்ற மரியாள்கள், சலோமி என அனைவரும் ஆண்டவருடைய உடலுக்கு தடவ வாசனைத் திரவியங்களை தயார் செய்வார்கள்.. ஆனால் இந்த அன்புத்தாயார் மட்டும் தன் மகனுடைய பாடுகளைத் தியானித்தவராய்.. தன் மகன் உயிர்ப்புக்கு காத்துக்கொண்டிருப்பார்...

ஆண்டவருடைய உடலுக்கு வாசனைத் திரவியம் தடவ சென்ற குழுவில் மாதா இல்லை...

உயிர்த்த இயேசுவின் காட்சிகளுக்கு பின் சீடர்களும் மற்றவர்களும் விசுவசித்தது பெரிய விசயம் அல்ல. ஆனால் ஆண்டவருடைய உயிர்ப்புக்கு முன்பே..

ஆண்டவர் உயித்தெழுவார் என நம்பி அவருக்காக காத்து இருத்தலே உண்மையான விசுவாசம்...

அதில் வெற்றி பெற்றவர் நம் தாய் மட்டும்தான்...

ஆகவே இந்த விசுவாசத்தின் தாயிடம் மன்றாடுவோம்...

அவரிடமிருந்து அன்பையும், தேவ ஸ்நேகத்தையும். நம்பிக்கையையும் உயிருள்ள விசுவாசத்தையும் பெறுவோம்.. பெற்று அவரோடு இனைந்து இந்த பாஸ்காப் பெருவிழாவைக் கொண்டாடுவோம்... முழு மகிழ்ச்சியோடு...

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !