செபமாலை எல்லா இடைஞ்சல்களையும் ஒழித்துக் கட்டும் என்னும் நம்பிக்கை 82 வயதுள்ள ஒரு வயோதிக மாதுக்கு நலனை அளித்தது . கம்யூனிசப் பேய் தாண்டவமாடும் யூகோஸ்லாவியாவிலிருந்து அமெரிக்கா ஓடி ஒளிய ஆசித்தாள்.அங்கு நியூயார்க் என்னும் நகரில் அவரது மகனும் மருமகளும் இருந்தனர் .அனுமதிச் சீட்டு பெறுவதற்கு இடையூறாக இருந்த பற்பல விஷயங்களுள் ஒன்று அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்னும் அபிப்பிராயமாம் . இதிலும் செபமாலை சொல்லி வெற்றி கொள்ளலாம் என்னும் நம்பிக்கை அவளுக்கு . "இரக்கமுள்ள நிலையம் " ஒன்று இருந்தது அங்கு . வேறொரு முறை அங்கு வைத்தியர்கள் அவளை சோதிக்கச் செய்தனர் . எக்ஸ்ரே உடல் குறைகள் ஒன்றையும் காட்டவில்லையென வைத்தியர்கள் அவளுக்கு நல்ல செய்தி கொண்டு வந்தனர் . இதைக் கேட்டதும் அவள் ஒன்றும் பதிலளிக்காமல் ஏமாந்தவளைப் போல் ஏங்கி இருக்கவே , அதை மறுமுறையும் வைத்தியர் சொன்னார் . " சும்மா இரு ஐயா.. உனக்குத் தெரியவில்லையா ? நான் ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன் " என்றாள் அந்த வியாதியஸ்தி. செபமாலை தான் சொல்லிக்கொண்டிருந்தாள். இன்னொருமுறை மனுப் போடச் சொல்லினர் .மனுப்போட்டாள் செபமாலை சொன்னாள் . இறுதியில் வெற்றி . 1953 ஆம் ஆண்டில் வெரோனிக்கா பூசணிக் என்ற அந்த மாது அனுமதிச்சீட்டு பெற்று அமெரிக்கா சென்றாள்
ஒரு முறை புனித சாமிநாதர் ஜெபமாலையைப் பற்றி போதித்தார் .பெரிய பிரசங்கி என்று பேரெடுத்தார் . பல கலாசாலை கல்லூரிகளுக்கே முதன்மையான பாரீஸ் பட்டணத்து பேராலயத்தில் அருளப்பர் திருநாளன்று பிரசங்கம் வைக்க அவருக்கு அழைப்பு . பெரிய பெரிய சாஸ்திரிகள் வருவார்கள் என்று எண்ணி அர்ச் அருளப்பரைப் பற்றி அருமையான பிரசங்கம் ஒன்று தயார் செய்தார் ,பிரசங்கம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேவதாய் அவருக்கு தரிசனையாகி ஒரு புத்தகத்தை நீட்டி " மகனே டோமினிக், நீ தயாரித்த பிரசங்கம் அபாரம் ; நான் கொண்டு வந்திருக்கும் பிரசங்கம் அதைவிட அபாரம் . வீண் சிலாக்கியத்தைத் தேடாதே . இலேசான நடையில் இப்புத்தகத்தில் உள்ளது போல் எளிய நடையில் சொல் " என்று கூறி மறைந்தார் . பிரசங்க மேடைக்கு வந்த போது, எதிரில் பெரிய பெரிய பட்டதாரிகளான கலாசாலை மாணவர்களும் , ஆசிரியர்களும் , பிரபுக்களும் குழுமி இருக்கக் கண்டார் . " ஜெபமாலையை பற்றி சாதாரண பொருளையே எளிய வடிவில் சொன்னார் . அன்று அவருக்கு நிறைய பாராட்டு கிடைத்தது. நிறைய பெரிய மனிதர்கள் ஜெபமாலை ஜெபிக்க முடிவு செய்தனர். மாமரித்தாய் அவருக்குத் தோன்றி " டொமினிக் , நீ உன் புத்தித் திறமையில் ஊன்றி நிற்காமல் , மனிதர் புகழ்ச்சியைத் தேடாமல் , மக்கள் ஈடேற்றத்துக்காக தாழ்மையாய் நடப்பதைக் கண்டு எனக்கு மனமகிழ்ச்சி . மக்கள் செபத்தின் மேல் பிரியங்கொண்டு , செபமாலையைச் செய்து வருவார்களேயானால் இரக்கமுள்ள ஆண்டவர் அவர்களுக்கு வரப்பிரசாதத்தைக் கொடுப்பார் என்பது நிச்சயம் . ஆதலால் செபமாலையைப் பற்றி பிரசங்கம் வை " என்று சொல்லிப் போனார்
இயேசுவுக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க