சோதனைகளால் செபமாலை பக்தியை கைவிட்ட டொமினிகாவை நரகத் தீர்ப்பிலிருந்து காப்பாற்றி வாழ்வளித்த நமதன்னை

ஒருமுறை ஆசீர்வதிக்கப்பட்ட ஆலன் தனது போதனையின் போது டொமினிக்கா என்று ஒரு பெண்மணியின் வாழ்வினைப் பற்றி மக்களுக்கு கூறியதாவது, 

தொடக்கத்தில் செபமாலை செபித்து வந்த டொமினிக்கா, பல்வேறு சோதனைகளால் அதனை கைவிட்டுவிட்டார். அவர் மிகவும் வறுமையில் வாடினார், வறுமையின் கோரப்பிடியினால் ஒருநாள் அவர் தன்னைத் தானே மூன்று முறை கத்தியால் குதி தற்கொலைக்கு முயன்றார்.

அவரது மரண தருவாயில், அவரை நரகத்திற்கு கூட்டிச் செல்ல பிசாசுகள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த வேலையில், நமது பரிசுத்த அன்னை அவருக்கு தோன்றி கூறியதாவது," மகளே, நீ என்னை மறந்தாலும், என்னை மகிமைப் படுத்த ஒருகாலத்தில் நீ செபமாலை செபித்த காரணத்தால் நான் உன்னை மறக்கவில்லை. ஆனால் இப்பொழுது நீ உனது செபமாலை பக்தியை புதுப்பித்தால், உனது வாழ்வு மட்டுமின்றி, நீ இழந்த உனது செல்வங்களையும் நான் திருப்பித் தருவேன்". 

டொமினிக்கா உடல் நலம் பெற்ற பின், விடா முயற்சியுடன் செபமாலை செபித்து வந்தார். அவரது செல்வங்களை திரும்பப் பெற்றார்.  

அவர் இறக்கும் தருவாயில், நமதன்னை அவரை மீண்டும் சந்தித்து அவரது செபமாலை பக்தியை வாழ்த்தினார். பின்னர் அவர் பரிசுத்தமாய் இறைவனடி சேர்ந்தார். 

நாமும் தினமும் செபமாலை செபித்து, நமதன்னை மரியாளுடன் ஒன்றி வாழ்ந்து, அவளின் அருளை பெற்று இம்மையிலும் மறுமையிலும் அவளது நிழலில் வாழ்வோமாக!!!!!