பெரிய நாயகி அன்னை புகழ் மாலை!

சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே, கிருபையாயிரும்

சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

பெரியநாயகியான புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

நித்திய காலமாய்ச் சர்வத்துக்கும் ஆண்டவளாகத் தேவ சித்தத்தால் நியமிக்கப்பட்ட பெரிய நாயகியே ,

பரலோக பூலோக இராக்கினியான மாசில்லாமல் உற்பவித்த பெரிய நாயகியே

ஆதி முதல் நிகரற்ற பரிசுத்தத்தனமாய்ப் பிறந்த பெரிய நாயகியே

எப்போதும் மாசில்லாதவளாய் விளங்கிய பெரியநாயகியே

விடியற்கால நட்சத்திரமாக உலகத்தில் உதித்த பெரிய நாயகியே

பூவுலகில் சஞ்சரித்த அளவும் நினைவினாலும் ஆசையினாலும் பரலோகத்தில் தங்கின பெரியநாயகியே

தேவ சித்தத்தினால் உமக்குக் குறிக்கப்பட்ட சீவிய காலம்ளவும் 

இப் பரதேச துன்பங்களை அத்தியந்த தைரியம் பக்தி பொறுமை முதலிய 

சற்குணங்களோடு அனுபவித்த பெரிய நாயகியே

இவ்வுலகத்தில் இருந்த நாள் மட்டும்  அதிகம் அதிகமாய் எல்லா வரங்களிலும் 

அதிகரித்து நிகரில்லாத புனித புண்ணிய சம்பாவனையடைந்த பெரிய நாயகியே

உமது திரு மரண சமயத்தில்  தூர தேசங்களில் இருந்த  அப்போஸ்தலர்களை  

முதலாய்  அற்புதமாக வரும்படி  செய்தருளிய  பெரிய நாயகியே,

இப்பிரபஞ்சம்  விடுவதற்கு முன் தாயின் அன்போடே  

சீஷர்களை ஆசீர்வதித்துத்  தேற்றிய பெரிய நாயகியே,

அச்சமயத்தில்  தரிசனையான சம்மனசுக்களால்  

பேரின்ப சந்தோஷமடைந்த  பெரிய நாயகியே,

தேவ சிநேக மிகுதியால்  ஆத்துமம் பிரிந்து 

பரலோகத்தில்  சேர்ந்த பெரிய நாயகியே,

சொல்லில் அடங்காத  ஆனந்தத்துடன்  உம்முடைய

 திருக்குமாரன்  சமூகத்தில்  சேர்ந்த  பெரிய நாயகியே ,

சம்மனசுக்களும்  அப்போஸ்தலர்களும் திருச்சங்கீதங்களைத்  

தொனிக்க  மிகுந்த  பக்தி வணக்கத்தோடே சீஷர்களால்  திருமேனி 

அடக்கம்  செய்யப்பட்ட பெரிய நாயகியே,

மூன்று நாள் பரியந்தம்  உமது திருக்கல்லறையில்  கேட்கப்பட்ட

 சம்மனசுக்களுடைய  இன்பமுள்ள  சங்கீதங்களால் ஸ்துதிக்கப்பட்ட பெரிய நாயகியே,

மூன்றாம்  நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்துப் பேரின்ப 

இராச்சியத்துக்கு  எழுந்தருளின பெரிய நாயகியே,

அத்தியந்த மகிமை ஒட்டலோகமாய்ப்  பரலோகத்தில்  சேர்ந்த  பெரிய நாயகியே,

அப்பொழுது சம்மனசுக்களின்  சேனைகளால் சொல்லில் 

அடங்காத  இன்ப சங்கீதங்களைக்  கொண்டு   ஸ்தித்துக்

  கொண்டாடப்பட்ட பெரிய நாயகியே,

பெண்ணால்  அழிந்த உலகைப்  பெண்ணாலே  

மீட்கக் கருதின  தேவபிதாவினால் இரட்சகருக்கு மாதாவாக  நியமிக்கப்பட்ட  பெரிய நாயகியே,

பரம நாயகியாகிய மரியென்னும் தயை நிறைந்த 

நாமதேயம்  சூட்டப்பட்ட  பெரிய நாயகியே,

வயதில் வளர மென்மேலும் சகல புண்ணியங்களாலும் 

 அதிகரித்து விளங்கின  பெரிய நாயகியே,

மனிதரெல்லார்க்கும்  புண்ணிய  மாதிரிகையாகவும் 

ஞான தீபமாகவும்  ஒளிர்ந்த பெரிய நாயகியே,

அருள் நிறைந்த  மரியே வாழ்க என்று 

 தேவதூதனால்  மங்களம் சொல்லப்பட்ட  பெரிய நாயகியே,

நிகரற்ற அற்புதமாய்  இஸ்பிரித்து சாந்துவின்  வரப்பிரசாதத்தினாலே

  கன்னிமையோடு கர்ப்பந்தரித்து  அவதரித்த  இரட்சகரைப்  பெற்ற பெரிய நாயகியே,

தேவகுமாரனாகிய கர்த்தாவைப் பெறும் முன்னும், பெற்ற போதும் ,

பெற்ற பின்னும்,  கன்னி மகிமை கெடாத  பெரிய நாயகியே,

அப்படியே சர்வேசுரனுடைய  புனித மாதாவாகிய 

பெரிய நாயகியே,

தேவ பிதாவின்  குமாரத்தியுமாய், சுதனின்  தாயாருமாய்,

  பரிசுத்த ஆவியின்  நேச பத்தினியுமாய்  இருக்கிற பெரிய நாயகியே,

சர்வேசுரனுடைய  உத்தம சாயலுமாய்த் 

 தேவாலயமுமாய்  விளங்கிய பெரிய நாயகியே,

எங்கள்  இரட்சணியத்தின்  நிமித்தம்  இயேசு நாதருடைய 

திருப்பாடுகளுக்குப் பங்காளியான பெரிய நாயகியே,

அவர் உயிர்த்த போதும் மோட்சத்திற்கு  எழுந்தருளின போதும்  

அளவிறந்த ஆனந்தம்  அனுபவித்த  பெரிய நாயகியே,

சுவாமி மோட்சத்துக்கு ஆரோகணமான  பின்பு திருச்சபைக்கு  

ஆறுதலும்  ஆதரவுமாக இவ்வுலகத்தில் நின்று போன  பெரிய நாயகியே,

அப்பொழுது சம்மனசுக்களின்  சேனைகளால் சொல்லில் அடங்காத  இன்ப சங்கீதங்களைக்  கொண்டு   ஸ்தித்துக்  கொண்டாடப்பட்ட பெரிய நாயகியே,

உம்முடைய திருக்குமாரனால்  நிகரற்ற சுத்த நேசத்துடனே  அரவணைக்கப்பட்ட பெரிய நாயகியே,

பிதாப் பிதாக்கள் முதலிய  சகல மோட்சவாசிகளினாலும்  வணங்கிக் கொண்டாடப்பட்ட பெரிய நாயகியே,

சர்வலோகத்துக்கும் இராக்கினியாய்த் தேவ பிதாவினால்  

மகிமைக் கிரீடம் சூட்டப்பட்ட பெரிய நாயகியே,

உம்முடைய திருக்குமாரனின்  அண்டையில் 

மகிமைச் சிம்மாசனத்தில்  வீற்றிருக்கிற பெரிய நாயகியே,

ஆமேன்