ஒரு கொள்ளையனின் மனமாற்றத்திற்கு, நல்லடக்கத்திற்கு உதவிய நமதன்னையின் மேல் கொண்ட சனிக்கிழமை பக்தி

ட்ரெண்ட்டில் உள்ள மலை மேல், அனைவரும் பயப்பட்ட கொள்ளையன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள், துறவி ஒருவர் அவனது வாழ்க்கை முறையை மாற்றி கடவுளிடம் வர  அறிவுறுத்தினார். அதற்கு ஒரே வழியாக சனிக்கிழமைகளில் தேவமாதாவின் மகிமைக்காக உபவாசம் இருக்கவும், அந்த நாளில் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.அவ்வாறு செய்வதன் மூலம் தேவதாய்,  அவன் இறக்கும் தருவாயில் அருளிரக்கமாக எல்லாம் வல்ல இறைவனின் மன்னிப்பைப் பெற்று தருவார் என்று கூறினார்.

அந்தக் கொள்ளையனும் இந்த அறிவுரையை பின்பற்றினான், அதற்க்காக தனக்குத்தானே இந்த உபவாச ஒறுத்தலை மீறுவதில்லை என உறுதிமொழியும் எடுத்துக்கொண்டான். அன்றிலிருந்து சனிக்கிழமைகளில் ஆயுதங்கள் ஏதுமின்றி வெளியில் செல்லலானான். 

ஒரு சனிக்கிழமையில் நீதியின் சேவகர்களிடம் அகப்பட்டான். தனது உறுதிமொழியை மீறாமல் அவர்களிடம் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல், தன்னை ஒப்படைத்தான்.நீதிபதி அவனுடைய வயோதிகத்தை கருத்தில் கொண்டு, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற விருப்பப்பட்டார். 

ஆனால், தேவமாதாவின் அருளிரக்கத்தால் உந்தப்பட்டு, தனது பாவங்களுக்கு தண்டனையாக உயிர் துறப்பதாக கூறினான். மேலும் அந்த நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் கண்ணீரோடு தனது வாழ்வின் அனைத்து குற்றங்களையும் அறிக்கையிட்டான். அங்கிருந்த அனைவரும் அவனுக்காக கண்ணீர் விட்டனர். அவனது தலை வெட்டப்பட்டது, கல்லறை ஒன்று தோண்டப்பட்டு, சிறிய சடங்குடன் அடக்கம் செய்யப்பட்டான். 

ஆனால் அதன் பின்னர் நமது கடவுளின் தாய்,  நான்கு கன்னியர்கள் புடை சூழ  வந்து அந்த இடத்திலிருந்து அவனது உடலை எடுத்து உயர்தரமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட துணியில் பொதிந்து நகர வாயிலுக்கு கொண்டு சென்றனர். 

நமது பரிசுத்த தேவதாய் அங்கிருந்த காவலர்களிடம்," ஆயரிடம் சென்று என்னுடைய பெயரால், என்னுடைய இந்த உண்மையுள்ள ஊழியனை, ஒரு ஆலயத்தினுள் சிறப்பு மிக்க நல்லடக்கம் செய்ய வேண்டும்" என்று கூறுமாறு பணித்தார். அவ்வாறே செய்யப்பட்டது. 

அனைத்து மக்களும் அந்த இடத்திற்கு  விரைந்தனர். அங்கு அவரது உடல் விலையுயர்ந்த பேழையில் ஒரு மேடையின் மேல் வைத்திருப்பதைக் கண்டனர். 

தனது மாவட்டத்திலிருந்த மக்களனைவரும் சனிக்கிழமை உபவாசம் இருக்கத் தொடங்கியதை இந்நிகழ்ச்சியோடு தொடர்பு படுத்தினான்.

நாமும் பரிசுத்த தேவமாதாவின் மகிமைக்காக  சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து, அன்னையின் செபமாலை செபித்து, இம்மையிலும் மறுமையிலும் அன்னையின் அருள் வரங்களை அபரிமிதமாய்ப் பெறுவோமாக!!!!

சிந்தனை

ஒவ்வொரு மாதமும் முதல் சனி மாதவுக்கு மிகவும் உகந்தநாள் அன்று முறையாக பாவசங்கீதனம் செய்து முழுதிருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை உட்க்கொண்டு ஜெபமாலை ஜெபித்து வந்தால் நிச்சயமாக முடிவில் மோட்சம் உண்டு இது மாதாவே சொன்னது   பாத்திமா காட்சியில்

இயேசுவுக்கே புகழ் ! மாமரிதாயே வாழ்க