பெரிய யாகப்பர் சந்தியாகப்பர் ஆக மாறியது எப்படி?

 நம் தரங்கம்பாடி ட்ரங்க்பார் ஆன கதை தான். செயின்ட் ஜேம்ஸ் என்பது ஆங்கிலத்தில் அவருடைய பெயர். யேசுநதருடைய சகோதரர் என்று அழைக்கப்பேறு பெற்ற  சின்ன யாகப்பரிடமிருந்து அவரை வேறு படுத்திக்காட்டவே அவரை பெரிய யாகப்பர் என்று அழைத்தனர். எனவே இவரை பெரிய யாகப்பர் என்றும் ST.JAMES THE GREAT என்றும்

சின்ன யாகப்பரை ST JAMES THE LESS அழைத்தனர். யாகப்பர் என்பது அரபியில் யாகூப் என்று அழைக்கப்படும். இவர் வேதம் போதிக்க ஸ்பெயின் தேசம் சென்று மீண்டும்   இஸ்ராயேல் தேசம் வந்தபோது ஏரோது மன்னனால் சிரச்சேதம் செய்யபட்டு வேத சாட்சியாய் மரித்தார், பல ஆண்டுகளுக்குப்பின்னர் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்திருந்த அவருடைய

சீடர்கள் அவருடைய கல்லரையைத்தோண்டி அவருடைய எலும்புகளை தங்களுடைய நாட்டிற்கு எடுத்துச்சென்றனர். அங்கு உலகப்புகழ் பெற்ற ஒரு ஆலயத்தை அவருடைய கல்லறை  மேலேயே கட்டினர். அது SANTIAGO DE COMPOSTALA என்று அழைக்கப்படுகிறது. ஸ்பெயின் மக்களுக்கு நம் தமிழில் வல்லினம் போல் இருக்குமோ என்னமோ  தெரியவில்லை. அதனால் செயின்ட் என்பதை சந்த் என்றும் யாக்கோபு என்பதை யாஹூ என்றும் மொத்ததில் சந்த் யாஹூ என்று அழைத்தனர். அதுவும் பிற்காலத்தில்

சந்தியாஹூ என்றுமாறியது. பிறகு நம் தமிழில் ச ந்தியாகப்பர் என்று மாறியது.

       யேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லரைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும்  அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லரைகள் மீதே ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பாகும். அவைகள் ரோமில் வத்திக்கானில் தூய பேதுரு ஆலயமும் நம் இந்தியாவில்

நம் சென்னையில் மயிலப்பூரில் அமைந்துள்ள சந்த் தோமா ஆலயமும் ஸ்பெயின் தேசத்திலுள்ள தூய சந்தியாகப்பர் ஆலயமும் ஆகும். யேசு நாதருக்கு தன் பன்னிரெண்டு சீடர்களின் 

மீதும் பாசம் உண்டு என்றாலும் நம் சந்தியாகப்பர் மீது சற்று அதிகம் பாசம் கொண்டிருந்தார். இதைப்புறிந்துகொண்ட அவரது தாயார் சலோமி ஆண்டவரிடம் வந்து தன் இரு பிள்ளகளான

சந்தியாகப்பரையும் அவரது தம்பி சிவிசேஷகரான அருளப்பரையும் யேசுநாதர் மாட்சிமையில் வரும்போது அவருடைய வலப்பக்கத்தில் ஒருவரையும் இடப்பக்கத்தில் ஒருவரையும்

அமர்த்திக்கொள்ள வேண்டிக்கொண்டார். அந்த சலோமிதான் எவ்வளவு பேராசைக்காரி..இந்த சலோமி என்னும் பெண் யேசு நாதருக்கு என்ன உறவின் முறை என்றாள்.....சலோமியின் கணவர் சபதேயு. சலோமியின் தாய் சோபி. தந்தை சாலமோன்... இந்த சோபியின் தாயார் இஸ்மேரியா தந்தை எலியுத். இந்த இஸ்மேரியாவுக்கு இரண்டாவது மகளாக சோபியின் 

தங்கையாக பிறந்தவர்தான் அன்னம்மாள். அன்னம்மாளின் மகள் தான் தேவதாயார். தேவ தாயாரின் ஒரே மகன் தான் யேசு நாதர்.ஆக யேசுநாதரும் சந்தியாகப்பரும் அவர் சகோதரர்  சுவிசேஷகரான அருளப்பரும் சகோதர உறவின் முறையினரே. இவர்கள் மீது யேசு நாதர் வைத்த பேரன்பினால் தான் வல்ல செயல்கள் செய்யும்போதெல்லாம்  நம் சந்தியாகப்பரை தன்னோடே வைத்துக்கொண்டார். நம் சந்தியாகப்பருக்கு ஆண்டவருடைய வல்லமை அதிகமாகவே இருந்தது. ஏனெனில் அவர் நம் ஆண்டவர் மீது கொண்ட

அன்பும் விசுவாசமும் மிகவும் அதிகம். இதனால் அவருடைய வாக்கின் வல்லமையும் அதிகமாயிற்று. இடியும் அவருக்கு கீழ்படியும். யேசுநாதருக்கு நம் சந்தியாகப்பரைவிட  அவரது சகோதரர் அருளப்பரின்மீது பாசம் அதிகம் கொண்டார். அதினாலேதான் தன் இராப்போஜனத்தின் போது அருளப்பரை தன் வலப்பக்கத்தில் அமர்த்தி தன் மார்பின் மீது சாய்த்துக்கொள்ளவும் செய்தார்.        மேலும் தன் சிலுவைச்சாவின் போது தன் நேசமிகு தாயாரை தன் அன்பான சீடர் அருளப்பரிடம் இதோ உன் தாயார் என்றும் தன் தாயாரிடம் தனக்கு 

பதில் இதோ உன் மகன் என்றும் ஒப்படைத்தார் என்றால் ஸ்வாமி இவர்களிடம் எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் என்பது எளிதில் விளங்கும்.

யேசுநாதர் இறந்த பின்பு நம் பன்னிரண்டு அப்போஸ்த்தலர்களும் ஒன்று கூடி யேசுவின் நற்செய்தியை உலகம் அனைத்திற்க்கும் அறிவிக்க யார் யார் எந்தெந்த நாட்டிற்குப்போக   வேண்டும் என்று தங்களுக்குள்ளே சீட்டுப்போட்டுக்கொண்டார்கள். நம் சந்தியாகப்பருக்கு இஸ்பானியா [ஸ்பெய்ன்] தேசம் என்று வந்தது. இது தனக்கு ஆண்டவன் கட்டளை என்று

உணர்ந்த சந்தியாகப்பர் ஸ்பெய்ன் தேசம் புறப்பட்டார். தன்னோடு தன்னுடைய எட்டு சீடர்களை தெரிந்துகொண்டு ஸ்பெய்ன் தேசம் புறப்பட்டுவிட்டார்.