ஆண்டவருடைய உமிழ் நீரும் கூட குணமாக்கும் ஆற்றல் படைத்தது..

அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவன் விழிகளில் உமிழ்ந்து, கைகளை அவன்மேல் வைத்து, "ஏதாவது தெரிகிறதா?" என்று கேட்டார்.

அவன் பார்வை பெறத்தொடங்கி, "மக்களைப் பார்க்கிறேன், மரங்கள் போலிருக்கின்றனர்; ஆனால் நடக்கின்றனர்" என்றான்.

பின்பு அவர் தம் கைகளை அவன் கண்களில் மீண்டும் வைக்கவே, அவன் பார்வை பெற்றுக் குணமடைந்து, அனைத்தையும் தெளிவாகக் காணலானான்.

மாற்கு 8 : 22-25

ஆண்டவருடைய உமிழ் நீரும் கூட குணமாக்கும் ஆற்றல் படைத்தது..

அப்படி இருக்க திவ்ய நற்கருணையில் முழு இயேசுவாக வீற்றிருக்கும் நம் ஆண்டவர் நோயைப் பரப்புவாரா? அவர் குணமாக்குவாரே தவிர ஒருக்காலும் எந்த நோயையும் பரப்ப மாட்டார்..

திவ்ய நற்கருணை ஆண்டவரைப் பெற நம்மை முழுமையாக தயாரித்து (மாதம் ஒருமுறையோ வாரம் ஒரு முறையோ நல்ல பாவசங்கீர்த்தணம் செய்து) திவ்ய திருப்பலியில் பக்தியோடு பங்கேற்று முழங்காலில் நின்று நாவில் அவரைப் பெற்றுக் கொள்வோம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !