தவக்கால சிந்தனைகள் 6 : தபசா? என்ன தபசு?...

தன்னை அறிவது போல் ஒருவனுக்கு அவ்வளவு கடினமானது எதுவும் கிடையாது என அறிஞர்களும் அர்ச்சியசிஷ்டர்களும், பிரசங்கிகளும், பேராசிரியர்களும் ஆதியிலிருந்தே சொல்லி வருகின்றனர். “உன்னையே அறிந்து கொள்'' என சாக்ரட்டீஸ் கூறினார்.

"ஓ சர்வேசுரா, நான் என்னையும் உம்மையும் அறியச் கெய்தருளும்" என புனித அகுஸ்தீன் மன்றாடினார். தன்னை அறிவது அதிமுக்கியம் சிரமமானது, சம்பாவனை தரக்கூடியது.

தன்னையறிய தபசு காலம் நல்ல ஒரு சந்தர்ப்பம் ஆண்டுதோறும் தபசுகாலம் வருகிறது. ஆனால் எல்லோரும் தபசு செய்கிறார்களா? தபசு என்றால் என்ன? இதை சிலர் அறிவதில்லை, அல்லது தங்களுக்கு தபசு அவசியம் என்று ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். வேறு சிலர் ஒரு காசு பெறாக் காரியங்களுக்காக, பந்தயப் போட்டி ஆடல்களில் வெற்றி பெற, கடும் தபசு செய்வார்கள்; ஆனால் தாங்கள் சிருஷ்டிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற ஒன்றும் செய்ய மாட்டார்கள். வேறு சிலர் தபசு காலத்தில் தபசு செய்வார்கள். ஆனால் தங்களுக்கு மிகத்தேவையான தபசைச் செய்வதில்லை.

சில தபசு முயற்சிகளைக் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டும் என திருச்சபை கற்பிக்கிறது. தக்க காரணமின்றி அவைகளைச் செய்யாதிருப்பது பாவம். சில நாட்களில் மாம்ச உணவை விலக்குவது. சில நாட்களில் விரும்புவதற்குக் குறைந்த அளவு உணவு அருந்துவது இவை போன்ற தபசு முயற்சிகளை யாரும் செய்யலாம். உலக இன்பங்கள் மீது பற்று வைக்காதிருக்க, பழைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய, சரீரம் கேட்பனவற்றை எதிர்த்து நிற்கக் கூடிய திடனை அடைய, மீட்பின் பலனை அடைய, விரும்பினால், மீட்பரது வேதனைகளில் பங்கு பெற வேண்டும் என்று உணரச் செய்ய, உணவைச் சற்று குறைப்பது மிக நல்லது.

திருச்சபையால் விதிக்கப்பட்டுள்ள தபசைத் தவிர வேறு பல தபசு முயற்சிகளையும் கிறிஸ்தவர்கள் தபசு காலத்தில் அனுசரிக்க வேண்டுமென்பது திருச்சபையின் விருப்பம். ஒருவனுக்கு மிகச்சிறந்த தபசாயிருப்பது இன்னொருவனுக்கு அனாவசியமாயிருக்கலாம், அல்லது தீமை விளைவிக்கலாம். ஆதலின் ஒவ்வொருவனும் தன்னை ஆழ்ந்து கவனித்து, தன் பலவீனங்கள், துர் நாட்டங்கள்; கடந்த காலத்தில் செய்துள்ள குற்றங்கள் பாவங்கள் இவற்றை உத்தேசித்து, செய்ய வேண்டிய தபசு முயற்சிகளைத் தெரிந்தெடுக்க வேண்டும். அந்த முயற்சிகளால் அவன் சிறந்த கிறிஸ்தவனாக வேண்டும்; பரிசுத்தவானாக வேண்டும்: மோட்சத்துக்கு சுதந்தரவாளியாவேன் என அதிக உறுதியுடன் சொல்லக்கூடியவனாக வேண்டும்.

தன்னை அறிந்து தனக்கேற்ற தபசு முயற்சிகளை செய்து வருகிறவன் அறிவாளி; அவன் புண்ணிய பாதையில் முன்னேறுவான். கீழே கொடுக்கப்பட் டிருப்பவை இதில் உனக்கு உதவியாயிருக்கும்.

நீ அதிகம் பேசுகிறாய், அனாவசியமான பேச்சுகளில் நேரத்தை வீணாக்குகிறாய். பேசிக் கொண்டிருக்க எப்போதும் துணைவர்களைத் தேடுகிறாய். தனியே இருப்பது உனக்கு சிரமமாயிருக்கிறது, வெறுப்பாயிருக்கிறது. அப்படியானால் ஒவ்வொரு நாளும் கோவிலுக்குப் போய் ஒரு மணி நேரமோ, அரை மணி நேரமோ திவ்விய நற்கருணைக்கு முன் இருந்து கடவுளுடன் மாத்திரமே பேசு.

பேச ஒருவரும் இல்லாதபோது தகாத புத்தகங்கள் பத்திரிகைகள் இவற்றை வாசிக்கிறாயா? இனி இவற்றை வாசியாதே, பதிலாக அரை மணி நேரமா வது நாள்தோறும் புனிதர்களின் வரலாறுகள் போன்ற நல்ல புத்தகங்களை வாசித்து வா.

வேலையிலும் செபத்திலும் மனதை நிலை நிறுத்துவது உனக்குக் கடினமாயிருக்கிறது. அதிக பராக்குகள் உண்டாகின்றன. நன்கு ஜெபிக்க, வேலை செய்ய நீ பிரதிக்கினைகள் செய்தபோதிலும், விடாப்பிடியாய் அவற்றை அனுசரிப்பதில்லை. அப்படியானால் தபசு காலத்தில் ஒவ்வொரு நாளும் பூசைக்குப் போய், திவ்விய நன்மை வாங்கி, நல்ல காரியங்களை நீ விடாப்பிடியாய்ச் செய்யமுடியும் என உனக்கும் கடவுளுக்கும் காண்பி.

ஏதோ உனக்கு இடையூறு உபத்திரவம் வந்தால் வெளியே அதைக் காண்பிக்கிறாய். முகத்தை நீளமாய் வைத்து, பிறருடன் சரியாய்ப் பேசுவதில்லை, உலகிலிருந்தே பயனில்லை என்றாப்போல் நடந்து கொள்கிறாய்.

புனிதர்களுக்கு எவ்வளவு உபத்திரவங்கள் இருந்தபோதிலும் எப்பொழுதும் சந்தோஷ முகத்துடன் இருந்தனர். சகல அர்ச்சிஷ்டர்களுடைய பிரார்த்தனையை ஒவ்வொரு நாளும் சொல்லி அவர்களைப்போல் இனிய முகத்துடன் இருக்கும் வரத்தைக் கேள்.

சிலரை நீ விரும்புவதில்லை. அதை அடிக்கடி வெளியே காண்பிக்கிறாய்; அவர்களுடன் பேசுவது உனக்கு சிரமமாயிருக்கிறது, அவர்களைப் பற்றி பிறரிடம் குறை கூறுகிறாய். அப்படியானால் உனக்கு யார் மேலென்கிலும் வெறுப்பு உண்டானால், அவர்களுடன் பட்சமாயிருப்பதாகவும், தபசுகால முழுவதும் அவனுக்கு விரோதமாக எவரிடமும் ஒரு வார்த்தை முதலாய்ச் சொல்வதில்லையென்றும் தீர்மானி.

நீ தொட்டாற் சிணுங்கியைப் போல், வெகு எளி தாக பிறரது வார்த்தையினாலும் செய்கையினாலும் வருத்தமடைகிறாய். அவர்களது வார்த்தைகளுக்கும் செய்கைகளுக்கும் அவர்கள் நினையாத பொருள் கொடுக்கிறாய். யாராகிலும் உண்யைாகவே பட்சமற்று நடந்தால் அவர்களை மன்னிப்பது உனக்கு சிரமமாயிருக்கிறது. அப்படியானால் தபசு காலத்தில் ஒவ் வொரு நாளும் சிலுவைப்பாதை செய்து கிறிஸ்துநா தர் பொறுமையுடன் சகித்த கொடுமைகளைச் சிந்தித்துப் பார். உனக்குச் செய்யப்படும் சிறு சிறு தீமைகளை நீ அவரைப் போல் பொறுமையாய் ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறாய் என்றும் அறிந்து கொள்.

எப்பொழுதும் தனியே இருக்க விரும்புகிறாய், அதிகமாய்ப் பேசுகிறவர்களைக் கண்டால் உனக்குக் கடுங் கோபம் வருகிறது. அப்படியானால் தபசு காலத்தில் வாரம் இரு முறையாவது கோயிலில் நடக்கும் மாலை ஆராதனைக்குப் போ. வியாதியாய் இருக்கும் ஒருவரை வாரம் ஒரு முறையாவது போய்ச் சந்தி.

கெட்ட நினைவுகளும் பரிசுத்த கற்புக்கு விரோதமான நினைவுகளும் வருகின்றன. சம்மதித்து விட் டேனோ என அளவுக்கு மிஞ்சிய கவலையும்; பாவசங் கீர்த்தனம் செய்த பின் அவை உண்மையாகவே மன்னிக்கப்பட்டனவா என்னும் சந்தேகமும் உன்னைத் துன்புறுத்துகின்றன... ஒரே குருவானவரிடம் தபசு காலத்தில் வாரந்தோறும் பாவசங்கீர்த்தனம் செய்துவா. அவரது உத்தரவுகளுக்கும் ஆலோசனை களைக்கும் நிபந்தனையின்றி கீழ்ப்படிந்துவா.

உலக காரியங்களில் முன்னேறி பெரும் பேர், கீர்த்தி, செல்வம் சம்பாதிக்கும் எண்ணமே உன்னை ஆட்கொண்டிருக்கிறது. பிள்ளைகளை நன்றாக கடவுளுக்காக வளர்க்க வேண்டுமே என்று முதலாய் நீ கவனிப்பதில்லை. ஒவ்வாரு நாளும் அரை மணி நேரம் திவ்விய நற்கருணைக்கு முன், கூடாவிட்டால் தனியே, செலவழி. உலகப் பொருட்கள் வெறும் புகைக்குச் சமானம். அர்ச்சியசிஷ்டனாகும்படி கடவுள் உன்னைச் சிருஷ்டித்திருக்கிறார். அந்த நோக்கம் நிறைவேற ஜெபமும் கடவுளது வரப்பிரசாதமும் அவசியம். இதைப் பற்றிச் சிந்தி.

அரசாங்கம், திருச்சபை, உன் வேலை இவற்றில் உன் அதிகாரிகளாய் இருப்பவர்களைப் பற்றி நீ குறைகூறி வருகிறாய். அவர்களது தீர்மானங்களிலும் செய்கைகளிலும் நீ குற்றம் கண்டுபிடிக்கிறாய். அவர்களை விட நீ கெட்டிக்காரன் என்றாப்போல் மற்றவர்களிடம் பேசுகிறாய். . . தாழ்ச்சி, அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிதல், வணக்கம் இவை உனக்கு அவசியம் ஆதலின் தபசு காலத்தில் ஒவ்வொரு நாளும் பிறருக்கு, முக்கியமாக உன் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களுக்கு உதவியாக ஏதாவது தாழ்ந்த வேலை செய். நீ முன் நிந்தித்த வீட்டு வேலைகளையும் செய். பிள்ளை களுக்கு உதவி செய், கற்றுக் கொடு. உனக்கு மேற் பட்டவர்கள் மேல் குறை கூறுவதற்குப் பதிலாக உனக்குக் கீழ் இருப்பவர்களுக்கு நீ என்ன செய்ய முடியும் எனப் பார்த்துச் செய்.

உன் வழியில் வருகிறவர்கள் மீது அடிக்கடி கோபப்படுகிறாய். உன் பெண்சாதி பிள்ளைகள் உனக்குப் பயந்து அச்ச நடுக்கத்துடன் வாழ வேண்டியிருக்கிறது. கோபமாயிருக்கையில் அசுத்த வார்த்தை களைப் பேசுகிறாய் ...... தபசு காலத்தில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் உன் மனச்சாட்சியைப் பரிசோதி. உன் பழைய பாவங்களையும் தற்போதைய குற்றங்களையும் நினைத்துப் பார்த்தால், மற்ற வர்களது பாவங்ளைக் கண்டு அவ்வளவு கோபங் கொள்ள மாட்டாய், தாழ்ச்சியுடன் வாரத்துக்கு ஒரு முறை நல்ல பாவசங்கீர்த்தனம் செய்; கடவுள் உன்னை மன்னிக்கிறார் என்ற நினைவு நீ மற்றவர்களது குற்றங்களை மன்னிக்க உனக்கு உதவி புரியும். - பல உன்னுடன் பிரயாணம் செய்கிறவர்கள், வேலை செய்கிறவர்கள் உனக்கடியில் வேலை பார்க்கிறவர்கள், நண்பர்கள், உன் ஊரில் உனக்குப் பழக்கமானவர்கள் ஆகியோர் செய்யும் தவறுகளைச் சகிக்க உன்னால் முடியவில்லை. பிறரது அபிப்பிராயங்களையும் நீ சகிப்ப தில்லை.... தபசு காலத்தில் ஒவ்வொரு நாளும் சிலுவைப்பாதை செய். தமது குமாரனைக் கொலை செய்த வர்கள் மேல் கடவுள் பொறுமையாய் இருந்தது பற்றி சிந்தி. நீ தடுக்கமுடியாதிருக்கும் தீமையினின்றும் கடவுள் நன்மையை வரவழைக்க முடியும் என்பதை மறந்து போகாதே.

நீ சோம்பேறி, இரவில் வெகு நேரத்தை வெட்டிக் கதைகளிலும் பயனில்லாக் காரியங்களிலும் செலவழித்து, காலையில் நெடு நேரம் தூங்குகிறாய். செய்யக் கடமைப் பட்டுள்ளவற்றைச் செய்யாது, உதவாக் கரைகளில் அலுவலாயிருக்கிறாய்.... குறிப்பிட்ட நேரத்தில் நித்திரைக்குப் போ. குறித்த நேரத்தில் எழுந்திரு. காலையில் திவ்விய பூசை கண்டு நன்மை வாங்கி நாளைத் தொடங்கு.

உன் பொருட்கள் மேல் உனக்கு மிஞ்சிய பற்று. நீ பிசினி, தர்மம் செய்வதில்லை... இந்த ஆசை நீங்கும் படி வாரத்துக்கு ஒரு முறையாகிலும் தர்மத்துக் கென்று ஏதாவது கொடுத்து வா.

நல்ல உணவு போன்ற வசதிகள் மேல் நீ கண்ணும் கருத்துமாயிருக்கிறாய். பிறரது வசதிகளை நீ கவனிப்பதே இல்லை ... தபசு கால சுத்த போசன ஒருசந்திக் கடன்களை நுணு நுணுக்கமாக அனுசரி; உண்ண அனுமதிக்கப்பட்ட சில உணவுகளையும் அவை அத் தியாவசியமில்லாத சமயங்களில் விலக்கி வா.

நீ பொல்லாத நாக்கு உடையவன். பிறரது தவறுகள், போக்கு, நடையுடை பாவனை, உடல் இவற்றைப் பற்றி பரிகாசமாகப் பேசி அவர்களை மனநோகப் பண் ணுகிறாய்... உன் வார்த்தைகளால் மனநோகப் பண் ணுகிறவர்களாக யாராவது காட்டிக்கொண்டால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் வழக்கத்தை தபசு காலத்தில் உன்னிடம் ஏற்படுத்திக்கொள். நீ ஒருவரை மனநோகச் செய்யும் ஒவ்வொரு முறையும் அவருக் காக ஒரு ஜெபம் சொல்லி உன்னைத் தண்டித்துக் கொள்.