இது மரியாயின் சுவிஷேசம் 3 : தேவ மாதாவின் தலை சிறந்த பத்து புண்ணியங்கள்..

நாமும் கடைப்பிடித்தால் கண்டிப்பாக புனிதர்களாவோம்..

"நமதன்னை மீது உண்மைபக்தி புனிதமாயிருக்கிறது. அதாவது பாவத்தை நாம் விலக்கி நடக்கச்செய்கிறது. கன்னித்தாயின் புண்ணியங்களை நாம் கண்டுபாவிக்கச்செய்கிறது. குறிப்பாக அவர்களுடைய,

1. ஆழ்ந்த தாழ்ச்சி

2. உயிருள்ள விசுவாசம்

3. கேள்வியற்ற கீழ்படிதல்

4. இடைவிடா ஜெபம்

5. எல்லாவற்றிலும் பரித்தியாகமுடன் இருத்தல்

6. தெய்வீகத்தூய்மை

7. பற்றியெரியும் நேசம்

8. இறுதி எல்லைக்கும் செல்லும் பொறுமை

9. சம்மனசுகளுக்குரிய சாந்த குணம்

10. தெய்வீக ஞானம்

இவைகளை நாமும் கண்டு நடக்கச்செய்கிறது. மிகப் புனித திருக் கன்னிகையின் முதன்மையான பத்து புண்ணியங்களும் இவைகளேயாம்.

நன்றி : அர்ச். லூயி மரிய மோன்போர்ட், மரியாயின் மீது உண்மை பக்தி நூல், அதிகாரம் 108,

சிந்தனை :

மேற்கண்ட மாதாவின் பத்து புண்ணியங்களை நாமும் கடைபிடித்தால்தான் நாமும் மாதாவின் பிள்ளைகளாக இருக்க முடியும். முதலில் அப்புண்ணியங்களை தியானிக்க வேண்டும். அவற்றில் எவைகளெல்லாம் நம்மிடம் இல்லை என்பதை யோசிக்க வேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு புண்ணியமும் நமக்கு எண்ணற்ற பேறுபலன்களை தருகிறது. நாம் பெரும்பாலும் அடிக்கடி இழப்பது தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பொறுமை. மாதாவின் மற்ற புண்ணியங்களுடன் நம்மை நினைத்துப்பார்க்கவே முடியாது இருந்தாலும் ஒவ்வொரு புண்ணியங்களையும் கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

பத்து முறை ஏன் பத்தாயிரம் முறை தோற்றாலும். மாதாவின் புண்ணியங்களை கடைபிடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. மாதாவின் பிள்ளைகள் என்றால் மாதாவை பிரதிபலிக்கும் பிள்ளைகளாக வாழ வேண்டும்...

அவர்களின் குணாதிசயங்களை நம் ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டும்.. மாதா நம் இடத்தில் இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்; எப்படி நடந்து கொள்வார்கள் என்று நம் ஒவ்வொரு செயலிலும் மாதாவை நினைத்துப்பார்க்க வேண்டும்...

அவர்கள் நம் நிலையில் இருந்தால் என்ன செய்வார்களோ அதையேதான் நாமும் செய்ய வேண்டும்...

நம் கண்களாலும், இருதயத்தாலும் மாதாவையும், நம் சேசு தெய்வத்தையும் பிரதிப்பலிப்பவர்களாக வாழ வேண்டும்...

அதற்கான முயற்சிகளில் நாம் இறங்கினால்... கண்டிப்பாக பரிசுத்தம் நம் இதயத்திலும், ஆத்மாவிலும் நுழையும்... பரிசுத்தமின்றி பரலோகம் இல்லை... ஆகவே நம் எண்ணத்திலும், உள்ளத்திலும், செயலிலும் பரிசுத்தம் பெற மாதாவின் பத்து புண்ணியங்களை அதாவது குணாதிசயங்களை கடைபிடிப்போம்...

அதற்காக முயற்சிப்போம்...

குறிப்பு : புத்தக தொடர்புக்கு சகோதரர் பால்ராஜ் Ph: 9487609983