சேசுநாதருடைய சீவியம்

59. (28) சேசுநாதர் சுவாமி இவ்வுலகத்திலே எத்தனை வருஷ காலம் இருந்தார்?

முப்பத்து மூன்று வருஷ காலம் இருந்தார்.

60. (29) இவ்வுலகத்தில் என்ன செய்து கொண்டு வந்தார்?

சகல புண்ணியங்களையும், அற்புதங்களையும் செய்து, தம்முடைய திவ்விய வேதத்தைப் போதித்து அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.

1. சேசுநாதருடைய சீவியத்தை எத்தனை பாகங்களாகப் பிரிக்கலாம்?

அந்தரங்க சீவியம், வெளியரங்க சீவியம் ஆகிய இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம்.

2. சேசுநாதருடைய அந்தரங்க சீவியம் எத்தனை வருஷ காலமாய் நிலைத்திருந்தது?

முப்பது வருஷ காலமாய் நிலைத்திருந்தது.