அமைதியான ஜெபமாலை யுத்தம் தேவை!

கொரோனா   நம் நாட்டையும், உலகையும் விட்டு விரைவாக வெளியேற வேண்டுமானால் நாம் வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு அமைதியான யுத்தம் செய்ய வேண்டும்.. Silience War… என்ன அது ? அதுதான் ஜெபமாலை யுத்தம்..போர்.. ஜெபமாலை பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும்.. ஆனால் அது தன்னுள் மிகப்பெரிய வல்லமையை அடக்கியுள்ளது.. ஜெபிப்பதற்கு மிக எளிய ஜெபங்கள் அடங்கியது.. யார் வேண்டுமானாலும் எளிமையாக ஜெபித்துவிடலாம்.. 

ஒரு ஜெபமாலையில் ஒரு விசுவாச பிரமாணம், 6-பரலோக மந்திரங்கள், 53- அருள் நிறை மந்திரங்கள் அடங்கியுள்ளன.. ஒரு ஜெபமாலை ஜெபிக்க 15 முதல் 20 நிமிடங்களே எடுக்கும்.. பார்பதற்கும், ஜெபிப்பதற்கும் எளிமையாக உள்ள இந்த ஜெபமாலையில்தான் கடவுள் தன் வலிமையை புகுத்தியுள்ளார்..

நம் பரலோக பிதா பெரிய பெரிய விஷயத்தைக் கொண்டோ, கடினமான காரியத்தைக்கொண்டோ அல்லது மிக வலிமையான (தேகத்தில்) ஆளைக் கொண்டோ எதுவும் செய்ய மாட்டார்.. அதை வைத்து வலியவனை, வலிமையான தேசத்தை, மிகக் கடினமான மனம் உள்ளவனை வீழ்த்தமாட்டார்… இதுவரை வீழ்த்தியதில்லை…

பேசப்பயந்த மோயிசனைப் பயன்படுத்துவார், குடும்பத்திலேயே வலிமை குறைந்த தாவீதை அரசராக்குவார், வலிமையான கோலியாத்தை வீழ்த்த ஒரு சிறிய கூலாங்கல்லை பயன்படுத்துவார்.. ஆற்றலிலும், எண்ணிக்கையிலும் அதிகமான படையினரை, மிகக்குறைந்த எண்ணிக்கையுள்ள படையை வைத்து அடித்து நொறுக்குவார்.. கடவுளைப் பொறுத்தவரை எளிமையான விஷயங்களே வலிமையான விஷயங்கள் அல்லது ஆயுதங்கள்… அவர் பிரசன்னம் போதும்..

அதே போல்தான் ஜெபமாலையை ஜெபிக்க வைத்து அதன் மூலம் கடவுள் இதுவரை செய்துள்ள ஆற்றல்மிகு செயல்கள், அற்புதங்கள் ஏராளம்… ஏராளம்.. வெளிப்பார்வைக்கு பார்த்தால் கிறிஸ்தவர்கள் கையில் ஒரு மாலையை வைத்து உருட்டிக்கொண்டே இருப்பதுபோல்தான் தெறியும்.. ஆனால் எத்தனையோ சர்வாதிகாரிகளின் தலையை அது உருட்டியிருக்கிறது.. போரை நிறுத்தியிருக்கிறது, அழிவிலிருந்து காப்பாற்றியிருக்கிறது, கொள்ளை நோய்களை வெளியேற்றியிருக்கிறது. காரணம் தெறியாமல் பல வல்லரசுகள் குளம்பிப்போயிருக்கின்றன.. அவர்களுக்கே தெறியாது ஏன் நாம் அந்த நாட்டைவிட்டு வெளியேறினோம் என்று.. அதனால்தான் ஜெபமாலைக்கு இன்னொரு பெயர் Silence War ( அமைதிப்போர்).

இந்த கண்ணுக்கு தெறியாமல் மிரட்டிக்கொண்டிருக்கும் வைரஸை யார் கண்ணுக்கும் தெறியாமல் வெளியேற்றும் வல்லமை இந்த ஜெபமாலைக்கே இருக்கிறது..

ஆகையினால் சோம்பல் பார்க்காமல், டிவியிலிருந்து சிறிதாவது விடுபட்டு கொஞ்சம் ஜெபமாலையும், கையுமாக உட்கார வேண்டும்.. ஒரு நாளைக்கு ஒரு 153 மணிகளாவது ஜெபிக்க வேண்டும்…

முதலில் சொல்லியது போல் எளிய ஜெபமான இந்த ஜெபமாலை ஜெபிக்க பல தடைகளையும், இடையூறுகளையும், சோம்பலையும், தூக்கத்தையும், அசமந்தத்தையும் வாரி இறைப்பான் சாத்தான்.. இந்த எளிய ஜெபத்தை எளிதில் ஜெபிக்க விட மாட்டான். ஏனென்றால் அவனுக்கும் ஜெபமாலையின் வலிமை தெறியும்… ஏனென்றால் அவனையும், அவன் இராஜங்கத்தையும், அவன் தந்திரத்தையும் அடித்து நொறுக்கும் ஆயுதம் அதுதானே.. அவனுக்கு எதிரான ஆயுதத்தை உச்சரிக்க வைப்பானா என்ன?

ஆனால் துணிந்து சோம்பலையும், களைபையும், அழுத்தத்தையும் தூக்கி எரிந்து விட்டு ஜெபமாலை ஜெபிக்க உட்கார்ந்தால் எதிரி ஓடியே விடுவான்.. நரகத்தின் அடி ஆழம் வரை கலங்கடிக்கும் ஜெபமாலைதான் இந்த நுண்ணியிருந்து நம்மை பாதுகாக்கவும், அதை இல்லாமல் செய்யவும் செய்ய வல்ல வலிமையான ஆயுதம்.. இந்த அமைதியான ஜெபமாலை யுத்தத்தை நாம் ஆரம்பித்து விளைவைப் பற்றி கவலைப்படாதால் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தால் இதுவும் சரி, அவனும் சரி சொல்லாமல் நம்மிடமிருந்து விடைபெறுவார்கள்..

ஏற்கனவே பலமுறை சொல்லியது போல் மாதாவுக்கு அதிக வலிமை தருவது இந்த ஜெபமாலை என்னும் உணவே.. எதிரியை வீழ்த்துவதற்கும்.. இந்த வைரஸை துரத்துவதற்கும் மாதா அதிகமாக வலிமை பெற வேண்டும்.. அதற்கு இந்த ஜெபமாலை என்ற உணவை நம் அன்னைக்கு அன்னையின் பிள்ளைகளாகிய நாம் தாராளமாக கொடுக்கவேண்டும்..

ஆகையால் இந்த சைலன்ட் வாரை தொடங்குவோம்..தொடருவோம்.. அதைக் உக்கிரமாக்குவோம்..

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம்.. ஜெபிப்போம்… ஜெபமாலை..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !