பின்னிணைப்பு : தமிழ்நாட்டில் இயேசுசபை

1542 இல் இந்தியாவிற்கு வந்து தமிழகத்தில் கத்தோலிக்கக் கிறித்தவ மறையைப் பரப்பியவர் யார்? 

தூய பிரான்சிஸ் சவேரியார். 

'கிறித்தவர்களில் சாதிப் பிரிவுகளால் வேறுபாடு பார்ப்போர் - கிறித்தவரேயல்லர் என்று சாதிப் பாகுபாட்டிற்கு எதிராக தமிழ்நாட்டில் முதல் குரல் எழுப்பியவர் யார்? 

தூய பிரான்சிஸ் சவேரியார். 

1578இல் இந்தியமொழிகளிலேயே முதலாவதாக வெளியான தம்பிரான் வணக்கம் என்ற தமிழ் அச்சு நூலை வெளியிட்ட இயேசுசபை அருட்தந்தை யார்? அவர் எவ்வாறு போற்றப்படுகிறார்? 

அருட்தந்தை. ஹென்றிக்கே ஹென்றிக்கஸ், தமிழ் அச்சுக் கலையின் தந்தை. 

1606- இல் இயேசுசபையின் மதுரை மிஷனைத் தொடங்கியவர் யார்? 

இராபர்ட் டி நொபிலி. 

தமிழகத்தில் இராபர்ட் டி நொபிலி எவ்வாறு போற்றப்பட்டார்? 

தத்துவ போதகர். 

ஞான உபதேசம், கடவுள் நிர்ணயம், ஆத்தும நிர்ணயம் உள்ளிட்ட 19 நூல்களை எழுதியவர் யார்? 

"தத்துவபோதகர்" இராபர்ட் டி நொபிலி. 

தம் முப்பதாம் வயதிற்குப்பின் தமிழகம் வந்து தமிழ் கற்றுத்தேர்ந்து இலக்கிய, இலக்கண நூல்கள் பல இயற்றி தமிழ் அகராதியியலின் தந்தை' ‘தமிழ் உரைநடையின் முன்னோடி' 'தமிழிசை இயக்கத்தின் வித்து' 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தவாதி' 'முதன்முதலில் திருக்குறளை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பு அறிஞர் என்றெல்லாம் போற்றப்படும் இயேசுசபை குரு யார்? 

கான்ஸ்டான்டியுஸ் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயருடைய வீரமாமுனிவர். 

பழைய மதுரை மிஷனில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இயேசுசபைப் பணியாளர்கள் எத்தனை பேர்? 

122 பேர்.

கழுகேர்கடையில் தூய சவேரியாருக்கு சிற்றாலயம் எழுப்பி மறைப் பணியாற்றியவர் யார்? 

வணக்கத்திற்குரிய 'வேதபோதகர்' அகஸ்தின் கப்பெல்லி. 

1773 இல் உலகமெங்கும் தடைசெய்யப்பட்ட இயேசுசபை மீண்டும் புதுமலர்ச்சியோடு புதிய மதுரைமிஷனாக எப்போது தொடங்கப்பட்டது? அப்போது மதுரை மிஷனுக்கு அனுப்பப் பெற்ற நான்கு பிரெஞ்சு மிஷனரிகள் யாவர்? 

1838 இல். லூயிகார்னியர், ஜோசப் பெட்ரண்டு, அலெக்சாண்டர் மார்ட்டின், லூயிதுராங் ஆகிய நால்வர். 

இந்தியாவில் இயேசுசபையின் முதல் மறைசாட்சி யார்? 

வணக்கத்திற்குரிய அந்தோனி கிரிமினாலி. 

வணக்கத்திற்குரிய அந்தோனி கிரிமினாலி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 

இத்தாலி. 

வணக்கத்திற்குரிய அந்தோணி கிரிமினாலி தமிழகத்தில் பணியாற்றிய பங்குத்தளம் யாது? 

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வேதாளை.

ஓரியூரில் மறைசாட்சியாக மரித்த "செம்மண் புனிதர்" யார்? 

சிவகங்கை மறைமாவட்டப் பாதுகாவலராகப் போற்றப்படும் தூய அருளானந்தர். 

தன்னிடம் அடைக்கலம் புகுந்த சின்னமருதுவை ஆங்கிலேயரிடமிருந்து காப்பாற்றியவர் யார்? '

சின்ன சவேரியார்' என்று அழைக்கப்பட்ட ஜேம்ஸ் டிரோசி சே.ச 

திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு முழுவதையும் கத்தோலிக்கர் சார்பில் முதன்முதலில் தமிழில் வெளியிட்டவர் யார்? 

அருட்தந்தை. ஜான்பாப்டிஸ்ட் திரிங்கால் சே.ச இயேசுசபையின் திரு இருதய சகோதரர் சபையை நிறுவிய இயேசுசபை அருட்தந்தை யார்?

அருட்தந்தை.அதிரியான் கௌசானல் சே.ச 

சருகணியில் மனிதப்புனிதராக வாழ்ந்து "சின்ன அருளானந்தர்" என்று போற்றப்பெற்ற இயேசுசபை அருட்தந்தை யார்? '

இறை ஊழியர் லூயிஸ் லெவே சே.ச 

மதுரை மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பு வகித்தவர் யார்? 

பேராயர் ஜான் பீட்டர் லெயோனார்டு சே.சா

1949 முதல் 1951 முடிய ஐ.நா சபையின் இந்தியப்பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்த இயேசுசபை அருட்தந்தை யார்? 

அருட்தந்தை.ஜெரோம் டிசோசா சே.ச 

தமிழகத்தில் திருஇருதய பக்தி முயற்சியில் பெரும்பங்கு வகித்த சேசுசபை அருட்தந்தை யார்?

அருட்தந்தை வெனிஸ் சே.ச

செண்பகனூர் அஞ்சல் நிலையத்தை உலகப்புகழ் மிக்கதாக உயர்த்தி இந்தியாவின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' (தாமரைத்திரு) விருது பெற்றவர் யார்? 

அருட்சகோதரர் பீட்டர் விசுவாசம் சே.ச 

மதுரையில் 'தி நொபிலி' அச்சகத்தைத் தொடங்கிய இயேசுசபை அருட்சகோதரர் யார்? 

அருட்சகோதரர் மிக்கேல்பொன்னுசாமி சே.ச 

தமிழகத்தில் பிறந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட படம் பழங்குடியின மக்களுக்காகப் போராடி, ஊஃபா சட்டத்தின்கீழ் சிறையில் தள்ளப்பட்டு உயிர்நீத்த அருட்தந்தை யார்? 

அருட்தந்தை. ஸ்டேன் சுவாமி சே.ச 

1985 - 87 மதுரை பேராயராகப் பொறுப்பு வகித்தவர் யார்? 

பேராயர் கஸ்மீர் ஞானாதிக்கம் சே.ச