இரக்கத்தின் மாதா!

பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்பும் ஆன்மாக்கள் விசேஷமாக மரியாயின் வியாகுலங்களின்மீது பக்தி கொள்ள வேண்டும். இந்த பக்தி நமக்கு மனஸ்தாபத்தையும், ஆறுதலையும், கடவுளின் இரக்கத்தின் மீது பலமான நம்பிக்கையையும், சோதனை வேளைகளில் பரிசுத்த மாதாவின் விசேஷ பாதுகாவலையும் நமக்குப் பெற்றுத் தருகிறது. மேலும் மனந்திரும்பிய பாவி மீண்டும் பாவத்தில் விழாதபடி அவனைப்பாதுகாக்கிறது. யாக

சர்வேசுரனுடைய தாய் ஒரு முறை தனது விசுவாசமான ஊழியரான அர்ச். பிரிட்ஜித் அம்மாளிடம், “பாவியானவன் எவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பாவங்களைக் கட்டிக் கொண்டிருந்தாலும், தான் மனந்திரும்ப வேண்டும் என்ற ஏக்கத்தோடு என்னை நோக்கித் திரும்பினால், நான் பெருந் தன்மையோடு அவனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக் கிறேன். ஏனென்றால், அவன் கட்டிக் கொண்ட பாவங்களை நான் பார்ப்பதில்லை. மாறாக எந்த மனநிலையில் அவன் என்னிடம் வருகிறான் என்பதை மட்டும்தான் நான் பார்க்கிறேன். ஏனென்றால் அவனது காயங்களைக் குணமாக்கு வதில் நான் அருவருப்பை உணர்வதில்லை. ஏனென்றால் நான் உண்மையாகவே கிருபைதயாபத்தின் மாதாவாக இருக் கிறேன், அப்படியே அழைக்கப்படுகிறேன்” என்று வெளிப் படுத்தினார்கள். - “பரிதாபத்திற்குரிய, கைவிடப்பட்ட பாவிகளே, நம்பிக்கை இழக்காதீர்கள்! உங்கள் கண்களை ஏறெடுத்து, மரியாயைப் பாருங்கள், இந்த நல்ல தாயாரின் இனிமையில் நம்பிக்கை கொண்டு, அவர்களால் தேற்றப்படுங்கள். ஏனெனில் நீங்கள் அனுபவித்துள்ள கப்பற்சேதத்திலிருந்து அவர்களே உங்களைக் காப்பாற்றி, இரட்சணியத்தின் துறை முகத்தை நோக்கி உங்களை வழிநடத்துவார்கள்” என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் கூறுகிறார்.

இதே போல் விசுவாசத்தை விட்டுப் பிரிந்து, நிர்ப்பாக்கிய நிலையில் உள்ள ஆன்மாக்களை மீட்டு உண்மையான ஆட்டுப்பட்டிக்கு அவர்களைத் திரும்பக்கொண்டு வந்து சேர்ப்பதுடன், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள்.

இங்கிலாந்தில் திருச்சபையை விட்டுப் பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஜெப அப்போஸ்தலத்துவம், அந்நாட்டின் மனந் திரும்புதலுக்காக வியாகுல மாதாவிடம் தன் மன்றாட்டுக் களைச் சமர்ப்பித்தது. இதன் பலனாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ப்ரொட்டஸ்டான்ட் சபையினர் சத்தியத்தின் அரவணைப்பிற்குத் திரும்பி வந்தார்கள். இந்த பக்தியை அனுசரிக்க முயன்றாலே போதும், தன்னை நோக்கி ஜெபிக்கப்படும் ஒரே ஒரு அருள்நிறை மந்திரத்திற்குக் கூட திவ்விய கன்னிகை பலன் தராமல் போவதில்லை என்பதை ஒருவன் புரிந்து கொள்வான்.

அன்னையின் வியாகுலங்களை முன்னிட்டு அவர்களிடம் உதவி கேட்டு மன்றாடுபவர்கள் நம்பிக்கையோடு அன்னை யின் உதவியை எதிர்பார்க்கலாம். மோட்சத்தால் தரப்பட்ட இந்த பக்தி பாவ உலகைக் கடவுளின் கோபத்திலிருந்து காப்பாற்றுகிறது, அல்லது குறைந்தபட்சம் அந்தக் கோபத் தைத் தணிக்கவாவது உதவுகிறது.