அமலோற்பவக் கன்னி மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, எங்கள் மகா இரக்கமுள்ள தாயே, நாங்கள் எங்களை முழுவதும் முழு தாழ்ச்சியோடு உமக்குக் கையளித்து, உமது தாய்க்குரிய பாதுகாவலை முழு நம்பிக்கை யோடு மன்றாடிக் கேட்கிறோம். -
கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவு என்று பரிசுத்த திருச்சபை உம்மைப் பற்றி அறிக்கையிடுகிறது. துயரப் படுபவர்கள் தங்கள் கஸ்திகளிலும், நோயாளிகள் தங்கள் நோய்களிலும், மரிக்கிறவர்கள் தங்கள் அவஸ்தையிலும், ஏழைகள் தங்கள் தரித்திரம் நிறைந்த சூழ்நிலைகளிலும், எல்லா விதமான தேவைகளிலும் இருப்பவர்கள் பொதுவான வையும், தனிப்பட்டவையுமான பேராபத்துக்களிலும் உம்மிடமே இடைவிடாது தஞ்சமடைகிறார்கள். உம்மிட மிருந்தே அவர்கள் எல்லோரும் ஆறுதலையும் பலத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
எங்கள் மிகுந்த நேசமுள்ள மாதாவே, ஈனப்பாவிகளா யிருக்கிற எங்கள் பேரிலும் உமது கருணைக் கண்களைத் திருப்பி, எங்கள் தாழ்மையான, நம்பிக்கையுள்ள ஜெபங்களை ஏற்றுக்கொள்ளத் தயை செய்யும். எங்கள் ஞான சரீர தேவைகள் எல்லாவற்றிலும் எங்களுக்கு உதவ வாரும்; எல்லாத் தீமையிலிருந்தும், விசேஷமாக சகலத்திலும் பெரிய தீமையாகிய பாவத்திலிருந்தும், அதில் விழும் சகல ஆபத்துக் களிலிருந்தும் எங்களை விடுவித்தருளும். ஆத்தும சரீரத்தில் எங்களுக்கு எதெல்லாம் தேவையென்று நீர் காண்கிறீரோ, அந்த ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும், விசேஷமாக, தேவ வரப்பிரசாதம் என்னும் அனைத்திலும் மேலான ஆசீர் வாதத்தையும் உமது திருக்குமாரனாகிய சேசுவிடமிருந்து எங்களுக்குப் பெற்றுத் தாரும். எங்களை அச்சுறுத்தும் அநேக ஆபத்துக்களுக்கு மத்தியிலும், எல்லாப் பக்கத்திலும் எங்களைக் குழப்புகிற எண்ணற்ற துன்பங்களிலும் நிர்ப்பாக் கியங்களிலும் எங்கள் ஆத்துமங்களைத் தேற்றுவீராக. தேவரீருடைய திவ்விய சுதனின் மகிமையுள்ள உயிர்ப்பில் உமது மாசற்ற ஆத்துமத்தை நிறைத்த அளவற்ற மகிழ்ச்சியின் வழியாக இதை உம்மிடம் நாங்கள் மன்றாடிக் கேட்கிறோம்.
திருச்சபைக்கு நீடிய சமாதானத்தையும், அதன் காணக் கூடிய தலைவராகிய உரோமைப் பாப்பரசருக்கு உதவி யையும் ஆறுதலையும், கிறீஸ்தவ அரசர்களுக்கும் தலைவர் களுக்கும் சமாதானத்தையும், எங்கள் அஞ்ஞான தேசத்து மக்களுக்கு சத்தியத்தின் ஒளியையும், உத்தரிக்கிற ஸ்தலத் திலுள்ள ஆத்துமங்களுக்கு அவர்களுடைய வேதனையில் நிவாரணத்தையும் பெற்றுத் தாரும். பாவிகளுக்கு அவர்களது பாவங்களிலிருந்து மன்னிப்பையும், நீதிமான்களுக்கு நன்மை செய்வதில் நிலைமை வரத்தையும் அடைந்து தந்தருளும். நாங்கள் பரிசுத்தர்களாய் வாழ்ந்து, பரிசுத்தமாய் மரித்து, பரகதியில் நித்தியப் பேரின்பத்தைப் பெற்றுக்கொள்ளத் தேவையான பரலோக உதவி எங்களுக்குக் கிடைக்கும் படியாக, ஓ மகா தயாளமுள்ள மாதாவே, எங்கள் எல்லோ ரையும் உமது நேசமும், வல்லமையுமுள்ள பாதுகாவலுக்குள் ஏற்றுக் கொள்ளும். ஆமென்.