திரு இருதயபக்தி! இறையிரக்க பக்தி!

திருஇருதயபக்தி நாம் ஆண்டவருக்கு கொடுப்பது.. இறையிரக்க பக்தி ஆண்டவரிடமிருந்து பெறுவது.

முதலில் திருஇருதய பக்தி…

திருஇருதய பக்தி மிகவும் முக்கியமானது… நான் நம் கடவுளுக்கு கொடுப்பது.. அதாவது நாம் நம் இயேசு சுவாமியின் இருதயத்திற்கு ஆறுதல் கொடுப்பது..

“ நீயாவது என் இருதயத்திற்கு ஆறுதல் தர மாட்டாயா? “ 

என்ற ஆண்டவரின் ஏக்கக் குரலுக்கு கேட்டு மனமுருகி… நன்றியற்ற மனிதர்களால் சகிக்கப்பட முடியாதவிதமாய் அவசங்கைப்படும் நம் ஆண்டவர் இயேசுவின் இருதயத்திற்கு நம்மால் முடிந்த ஆறுதல் கொடுப்பது. இதை யாரால் மட்டுமே தர முடியும் பலி ஆன்மாக்களால் மட்டுமே தர முடியும்..

ஏனென்றால் அந்த வாழ்க்கை துன்பங்களும், பாடுகளும், பரிகாரங்களும், முட்களும் நிறைந்ததாக இருக்கும். இதைத்தான் நாம் நம் வாழ்க்கையில் வரும் துன்பங்களை கஷ்ட்டங்களை ஆண்டவர் இயேசுவுக்காக பட்டு அவர் பாடுகளோடு சேர்த்து அவருக்கு ஆறுதலாக கொடுக்க வேண்டும்..

இதை கண்டிப்பாக ஆண்டவரை புரிந்து கொண்டவர்களாள் ஜெப தவ பரிகார வாழ்க்கை வாழ்பவர்களால் மட்டுமே தர முடியும்.

ஆனால் இறையிரக்க பக்தி என்பது…  நரகத்தில் விழும் பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களுக்காக.. 

மாதா ஒரு காட்சியில் சொல்லியிருப்பார்கள் அதாவது ஆண்டவரின் இறையிரக்கத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல் நிறைய ஆன்மாக்கள் நரகத்திற்கு செல்கிறார்கள் என்று.. 

ஆண்டவருடைய இரக்கம் நமக்கு மிகவும் தேவை… இப்போது யாராவது சாவான பாவத்தில் விழுந்து விட்டால்.. “ நமக்கு எல்லாமே முடிந்துவிட்டது. இனி நமக்கு நரகம்தான் கிடைக்கும் என்று அவர்களாகவே முடிவு செய்து பல தவறான முடிவுகளை எடுப்பது.

அதனால்தான் மாதா சுட்டிக் காட்டுவார்கள் மகளே! கடவுளின் இரக்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்… அது உங்களைக் காப்பாற்றும் என்று..

இப்போது நாமே ஒரு பெரிய பாவமோ… சாவன பாவமோ பலவீனத்தால் செய்து விட்டால் நாம் எப்படி நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அப்போதுதான் ஆண்டவரின் இறையிரக்கம் நமக்கு நினைவுக்கு வரவேண்டும்.

“ஆண்டவரே ! நான் பலவீனத்தால் தவறு செய்து விட்டேன். உம் இருக்கத்தின் மீது நம்பிக்கை வைக்கிறேன் என்னை நீங்கள் கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். அதன் பின் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

அன்று யூதாஸ் ஆண்டவரின் இரக்கத்தின் மீது நம்பிக்கை வைக்காமல்… “ மகனே யூதாஸ் “ என்று அழைத்த தாயின் அன்பையும், இரக்கத்தையும் புறக்கனித்து ஓடியதால் என்ன ஆனால் தூக்கு போட்டு செத்துப்போனான்.

ஆனால் யூதாஸை விட பெரிய பாவம் செய்தவர்தான் நம் இராயப்பர். ஆனால் அவர் என்ன செய்தார். மனம் திரும்பி அழுது புரண்டு கிடந்தவர் தேவமாதாவின் ஆறுதலான வார்த்தையால் ஆறுதலால் ஆண்டவரின் இரக்கத்தின் மேல் நம்பிக்கை வைத்து திரும்பி வந்தார்… முதல் போப் ஆண்டவராக பொறுப்பை ஏற்றால் நற்செய்தி அறிவித்தார்.. சிறை வாழ்க்கை சாட்டை அடி அனுபவித்தார் கடைசியில் நம் ஆண்டவருக்காக அவரை விட மேலாக தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு ஆண்டவருக்கு சாட்சியாக மரித்தார். அவரைக் காப்பாற்றியது எது? ஆண்டவரின் இரக்கமே…

இந்த காலத்தில் எல்லாம் தெரிந்த கடவுளுக்காக ஜெபதவங்கள் செய்யும் நாமே பாவத்தில் விழும்போது பலர் தப்பரையில் விழும்போது … பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களின் கதி என்ன? அவர்களை யார் காப்பாற்றுவார்கள் ? எது காப்பாற்றும்? நமக்கே ஆண்டவரின் இரக்கம் தேவையாயிருக்க… பரிதாபத்திற்குரிய ஆன்மாக்கள். பாவத்திலேயே வாழும் ஆன்மாக்களை காப்பாற்ற உதவும் இறையிரக்க பக்தி தேவையில்லையா? ஆதுவும் கண்டிப்பாக தேவையே… 1100 பக்கங்களில் ஒன்றிரண்டு பக்கங்கள் படித்தாலே மனம் மாறிவிடும்.. ஆண்டவரை நெருங்க ஆரம்பித்துவிடுவோம்..  ஆண்டவரின் இறையிரக்கம் ஆன்மாக்களை மனமாற்றுமே தவிர யாருக்கும் தீங்கிழைக்காது.. 

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !