அவன் பாவி, இவன் பாவி என்று சொல்ல அல்ல நான் பாவி என்பதற்கே இந்த பதிவு...

ஆண்டவருடைய ஏட்டுச் சுருளை (பைபிளை) எப்படிப் படிக்க வேண்டும் ?

“ஆண்டவரின் நூலில் கவனமாய்த் தேடிப் படியுங்கள், இவற்றுள் ஒன்றும் குறைந்து போகாது; ஒன்றுக்கொன்று துணையின்றிப் போய் விடாது; ஏனெனில் அவர் வாயிலிருந்து வந்தது அவரது ஆணையே, அவரது ஆவி தான் அவற்றை ஒன்று சேர்த்தது.’ – இசையாஸ் (ஏசாயா) 34 : 16

தனித்தனியாக வார்த்தைகளை எடுத்துக் கொண்டு அவரவர் இஷ்ட்டப்படி பொருள் கூறக் கூடாது..

“மறைநூலில் உள்ள இறைவாக்கு எதுவும் அவனவன் தரும் விளக்கத்திற்கு உட்படக்கூடியதன்று என்பதை நீங்கள் முதன் முதல் மனத்தில் வைக்க வேண்டும்.” – 2 இராயப்பர் (பேதுரு) 1: 20

அப்படித்திரித்துக் கூறினால்,

“அறியாதவர்களும் உறுதியற்றவர்களும் மறைநூலின் மற்றப் பகுதிகளுக்குப் பொருள் திரித்துக் கூறுவதுபோல, இவற்றிற்கும் கூறுகின்றனர். இதனால் தங்கள் மீதே அழிவை வருவித்துக் கொள்கின்றனர்.” 2 இராயப்பர் (பேதுரு) 3: 16.

அப்படி செய்கிறவர்களைச் பயங்கரமாக சாடுகிறார்: 

“யாராவது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நலமிக்க வார்த்தைகளிலும், பக்தி நெறிக்கு ஒத்த போதனையிலும் நிலைத்திராது மாறுபட்ட கொள்கைகளைப் போதித்தால், அவன் ஓர் அறிவிலி.

இறுமாப்புக் கொண்டு குருடனானவன். வீண் வாக்குவாதம் செய்வதிலும், வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவதிலும் பைத்தியம் கொண்டவன். இவற்றினின்று தான் பொறாமை, சண்டை, சச்சரவு, பழிச்சொல், பிறர் மீது பொல்லாத சந்தேகங்கள்.

சீரழிந்த மனத்தவர்களிடையே மோதல்கள் முதலியனவெல்லாம் உண்டாகின்றன. இப்படிச் சீரழிந்தவர்கள் உண்மையை இழந்தவர்களாய், பக்தி நெறியை ஆதாயம் தரும் தொழில் எனக் கருதுகிறார்கள். 1 தீமோத்தேயு 6 : 3-5

மேலும் வெறும் சொற்களைப் பற்றிக்கொண்டு சண்டையிடுபவர்கள் பற்றி..

“இவற்றை அவர்களுக்கு நினைவூட்டும், வெறும் சொற்களைப்பற்றிச் சண்டையிடுவதை நிறுத்தும்படி கடவுள் முன்னிலையிலும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளும். அப்படிச் சண்டையிடுவது பயனற்றது. அதைக் கேட்போருக்கும் அது கேட்டையே விளைவிக்கும்.” 2 தீமோத்தேயு 2 : 16

அது எந்த காலம்..??

“ஒரு காலம் வரும், அப்போது மக்கள் நலமிக்க போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் மனம் போன போக்கிலே எண்ணிறந்த போதகர்களைத் திரட்டிக்கொள்வர். 2 தீமோத்தேயு 4 : 3

வேதாகமத்தைப் புரிந்து கொள்ள பரிசுத்த ஆவியாரின் துணைகொண்டு விசுவாசத்தோடு வாசித்தால் அவரே எல்லாவற்றையும் உணர்த்துவார். அதை ஒன்று சேர்த்தவர் அவர்தானே மீண்டும் இசையாஸ் 34 : 16 -ஐ படிக்கவும்..

ஆதியாகம் முதல் திருவெளிப்பாடுவரை எல்லாவற்றிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது எல்லாருக்கும் தெறிந்த விசயம்.. மெசியா எப்போது தோன்றுவார்? எப்படித்தோன்றுவார்? என்ன நடக்கும் என்பது பற்றி இசையாஸ் இறைவாக்கினர் (ஏசாயா) எழுதியது..

மேலும் ஆதியாகமத்தில் எதிரியை பாம்பு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் கூட சாத்தான் என்று வரவில்லை..

“அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் பாம்பைப் பார்த்து: நீ அவ்வாறு செய்ததால் பூமியிலுள்ள எல்லாப் பிராணிகளிலும் சபிக்கப்பட்டதாய், உன் வயிற்றினால் ஊர்ந்து, உயிரோடிருக்கும் வரை மண்ணைத் தின்பாய்;

“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார். ஆதியாகமம் (தொடக்க நூல்) 3 : 14,15

திருவெளிப்பாட்டிற்கு வருவோம்.. அங்குதான் அலகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. மேலும் கீழ்கண்ட வசனம் ஆதியாகமத்தோடு இனைக்கிறது (Link).

“அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அதுவே ஆதியில் தோன்றிய பாம்பு; உலகனைத்தையும் வஞ்சிப்பதும் அதுவே. அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. அத்துடன் அதன் தூதர்களும் தள்ளப்பட்டனர்.” திருவெளிப்பாடு 12: 9

அதே போல் ஆதியாகமத்தில் (3:15) வந்த மாதா ஆதியாகமத்தில் துவங்கி திருவெளிப்பாடு 11:9 மற்றும் 12 முழுவதும் வருகிறார்கள்.. அதுதான் தூய ஆவியானவர் ஒன்று சேர்த்தது என்று சொல்லிவிட்டாரே.. மீண்டும் இசையாஸ் 34:16 -க்கு செல்லவும்..

ஆக பைபிளை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தோடும், தர்க்கம்-விதண்டாவாதம் செய்யும் நோக்கத்தோடும், மக்களை குளப்பும் நோக்கத்தோடும் வாசித்தால் அவர்களுக்கு அப்படித்தான் பரிசுத்த ஆவி காட்டுவார்.. ஏனென்றால் அவர்களிடம் விசுவாசம் இல்லையே.. இதே மன நிலையோடு யார் வாசித்தாலும்.. அவர்கள் வெளியே போய்விடுவார்கள்..

தூய ஆவியானவரே எனக்கு இந்த வசன்ம் புரிய வில்லை.. அதை எனக்கு விளக்கித்தாரும்.. இல்லையென்றால் அதை நான் அப்படியே விசுவசிக்கிறேன்.. நீர் எப்போது விளக்குவீரோ அப்போது விளக்கும் என்று வாசித்தால் அவர் பொறுமையாக விளக்கி புரிய வைப்பார்..

கேட்க செவியுள்ளோர் கேட்கட்டும்.. கேட்டால் நலம்; திரும்பினால் நலம்.

இப்பதிவு முக்கியமாக ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருக்கும் கத்தோலிக்க மக்களுக்காக

உதவி : ‘கத்தோலிக்கம் நம் பெருமை’ - புத்தகம், சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸ், வாழும் ஜெபமாலை இயக்கம், சென்னை.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !