வீட்டில் இருக்கும் நமக்கு ஜெபமாலையும், மன வல்ய ஜெபங்களுமே பாதுகாப்பு!

கீழ்கண்ட எல்லாருக்கும் தெறிந்த மன வல்ய ஜெபங்களை அடிக்கடி நாம் உச்சரிப்போம்.. அதுவும் தேவையினிமித்தமாக வெளியே போகும்போதும்.. வரும்போதும்..

1. “பிதா சுதன் பரிசுத்த ஆயியின் பெயராலே- ஆமென் “

2. “ இயேசுவின் இரத்தம் ஜெயம் “

3. “ இயேசு “ – இயேசுவின் திரு நாமமே ஒரு ஜெபம்தான் ஆகையால் அடிக்கடி உச்சரிப்போம்.. பயத்திலிருந்தும் நோயிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்.

4. “ மரியாயே வாழ்க ! “ ( இயேசுவின் பெயருக்கும் மாதாவின் பெயருக்கும் பிசாசு மட்டுமல்ல வைரஸும் தூர ஓடும்)

5. “ இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே எங்கள் இருதயத்தை தேவரீருடைய இருதயத்திற்கு ஒத்ததாக செய்தருளும் “

6. “ மரியாயின் மாசற்ற இருதயமே – எங்கள் இரட்சண்யமாயிரும்”

7. “ இயேசு மரி சூசை உங்களை நேசிக்கிறோம் – ஆன்மாக்களைக் காப்பாற்றுங்கள்

8. காவல் சம்மனசு ஜெபத்தை அடிக்கடி சொல்லுங்கள்..

9. சில பரலோக மந்திரங்கள், அருள் நிறை மந்திரங்களைச் சொல்லுங்கள் ( உதாரணமாக 1 பர 3 அருள் நிறை மந்திரங்கள்)

10. அடிக்கடி நம் மேலும், நாம் சாப்பிடும் உணவின் மேலும் சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளுங்கள். நம்மை மீட்ட சிலுவை… மீட்பின் கருவி… நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும் கருவி.. ( சிலுவை ஜெபங்களையும் சொல்லலாம்.. “ திருச்சிலுவையே எங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும்” என்றும் சொல்லலாம்..

11. “இயேசுவே என்னை இரட்சியும்”

12. “ இயேசுவே என் நம்பிக்கியயெல்லாம் உங்கள் பெயரில் வைக்கிறேன்”- இது மாதா சொல்லிக்கொடுத்த ஜெபம்.

13. இயேவுவே… மரியே.. இயேசுவே.. மரியே..

14. நமது பாதுகாவலர்களை, நமது பெயர் கொண்ட புனிதர்களை அடிக்கடி வேண்டிக்கொள்ள சொல்லுவோம்.. ( உ.ம் புனித சந்தியாகப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்)

15. மிக்கேல் அதிதூதர் ஜெபத்தையும் ஜெபிப்போம்.. ( அதி தூதரான அர்ச்சிஷ்ட்ட மிக்கேலே..)

16. “ இயேசுவின் மதுரமான திருஇருதயமே என் ஸ்நேகிதமாயிரும்”

17. இயேசுவின் திருஇருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபமும் செய்வோம்..

18. இயேசுவின் திருஇருதயத்திற்கும், மாதாவின் மாசற்ற இருதயத்திற்கும், நம்மையும், நம் குடும்பங்களையும் அனுதினமும் ஒப்புக்கொடுப்போம்..

19. ஆசை நன்மை அடிக்கடி வாங்குவோம்.. பாவசங்கீர்த்தன மந்திரத்தை தினமும் ஒருமுறையாவது சொல்வோம்.

20. திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்கிய பின்னும், ஆசை நன்மை வாங்கிய பின்னும் கீழ்கண்ட ஜெபத்தை அடிக்கடி ஜெபித்தீர்கள் என்றால் பயம் நம்மை விட்டு முற்றிலுமாக விலகிவிடும்..  நம்பிக்கியும் சந்தோசமும் ஏற்படும்,

“ஆண்டவராகிய இயேசுவே ! எனக்கு எத்தகைய மரணத்தைத் தர தேவரீருக்கு சித்தமோ அந்த மரணத்தையும், அதன் அத்தனை வேதனைகளையும் இப்போதே உம் திருக்கரத்தில் இருந்து மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் “

தினமும் குடும்ப ஜெபமாலையும், இயேசுவின் திருஇருதயத்திற்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் மிக மிக முக்கியம். 

மனவல்லிய ஜெபத்தில் முக்கியமான மூன்று,

“இயேசுவின் இரத்தம் ஜெயம்”  “ இயேசு “ மரியாயே வாழ்க”

மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு நம்மையும், நம் குடும்பத்தையும் அடிக்கடி ஜெபமாலையின் போது ஒப்புக்கொடுப்போம்.. அன்னையின் பாதுகாப்பு வளையமே மாதாவின் மாசற்ற இருதயம்தான்.. 

மாதாவின் மாசற்ற இருதயத்தின் பாதுகாப்பு, ஜெபமாலை, மாதா பக்தி என்பது நம்மையிம் நம் குடும்பத்தையும் தீய எதிரிகளிடமிருந்து பாதுகாத்து பத்திரமாக அவர் மகனும், நம் ஆண்டவருமான இயேசு சுவாமியின் பாதத்தில் சேர்ப்பதே ஆகும்.. 

ஆகையால் தயக்கமில்லாமல் நம் தாயிடம் தஞ்சம் புகுவோம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

திருப்பலியில் விளையாடினால், திவ்ய நற்கருணை ஆண்டவரிடம் விளையாடினால், மாதாவை இறக்கினால் இதுமட்டுமல்ல இதைவிட பெரிய அழிவுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

இப்போது கூட திருப்பலியை ஒப்புக்கொடுப்பதில் ஒற்றுமை (Unity) இல்லை..

நடுப்புசையில் ஆண்டவரை ஒற்றைக்கையில் தூக்குவது, ஆண்டவரை திருப்பிக்காட்டுவது, இடையில் சொந்த ஜெபங்கள் ( இன்னும் இருக்கிறது). அவரவர்க்கு எப்படி தோனுதோ அப்படி. அதைவிட வயிறு எரியும் செயல். திவ்ய நற்கருணை கொடுக்கும் போது மாற்றிகொடுப்பது அதாவது உண்டியலில் காசு போடுவது போது.. திவ்ய பலி பூசை ஒப்புக்கொடுக்கவும் ஆண்டவரை வழங்கவும்தானே குருக்களானீர்கள்.. அதில் என்ன சுத்தம் பார்க்கிறீர்கள்..

பழைய திவ்ய நற்கருணை ஆசீரை தூக்கிவிட்டு சுகமளிக்கும் வழிபாடு கொண்டு வந்தீர்களே..

ஆண்டவரை ஸ்தாபம் பண்ணிவிட்டு “ ஆண்டவரே வாரும் “ ஒரே கத்தல்.. கூச்சல்.. கூப்பாடு “ சளபளபள.. “ கேட்டால் அந்நிய பாஷையாம்.. ஏன் இப்போம் போயி பேச வேண்டியதுதானே அந்நிய பாசை பேசி சுகம் கொடுக்க வேண்டியதுதானே..

அமைதியாக நடந்த வழிபாடுகளையெல்லாம் ஆர்ப்பாட்டமாக்கி.. கொண்டாட்டமாக்கி.. கத்தோலிக்க பாரம்பரியத்தையே மண்ணாக்கிவிட்டீர்கள்..

நாம் திருந்தவில்லை என்றால் எதுவுமே திருந்தாது; எதுவும் சரியாது; இப்படியேதான் போகும்; இதுக்கு மேலேயும் போகும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !