நம் அன்னையின் கண்ணீரையும், வியாகுலங்களையும் தியானிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏழு வாக்குறுதிகள்!

அர்ச். பிரிட்ஜித்தம்மாள் (1303 - 1373) கூறுவதுபோல, தன் வியாகுலங்களையும், கண்ணீரையும் தியானித்தபடி ஏழு அருள் நிறை மந்திரங்களைச் சொல்பவர்களுக்கு தேவ அன்னை ஏழு வரப்பிரசாதங்களை அனுதினமும் வழங்குகிறார்கள்: 

1. அவர்களுடைய குடும்பத்திற்கு சமாதானம் அருள்வேன். 

2. தேவ இரகசியங்களைப் பற்றிய அறிவால் அவர்களை ஒளிரச் செய்வேன். 

3. அவர்களது வேதனைகளில் அவர்களைத் தேற்றுவேன். அவர்களது அலுவல்களில் அவர்களோடு இருப்பேன். 

4. ஆராதனைக்குரிய என் திவ்விய குமாரனின் திருச்சித்தத்திற்கோ, அல்லது அவர்களுடைய ஆன்மாக்களின் அர்ச்சியசிஷ்டதனத்திற்கோ எதிராக இல்லாத வரையில், அவர்கள் கேட்கும் அனைத்தையும் நான் அவர்களுக்குத் தந்தருள்வேன். 

5. சாத்தானுடன் அவர்கள் செய்யும் ஞான யுத்தத்தில் அவர்களைக் காப்பாற்றி, அவர்களது வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவர்களைப்பாதுகாப்பேன். 

6. அவர்களுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் காணக்கூடிய விதத்தில் நான் அவர்களுக்கு உதவி செய்வேன். 

7. என் கண்ணீ ர் மீதும், என் வியாகுலத்தின் மீதுமான பக்தியைப் பரப்புபவர்களை இவ்வுலக வாழ்விலிருந்து நேரடியாக பேரின்பமுள்ள பரலோக வாழ்விற்கு அழைத்துச் செல்லும் பாக்கியத்தை என் திவ்விய குமாரனிடமிருந்து பெற்றுள்ளேன். ஏனென்றால் அவர்களது எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு என் குமாரனே அவர்களது நித்திய ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்.”