ஜூன் மாதம் நம் ஆண்டவர் இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்!

“இதோ மனுமக்களை அளவற்றவிதமாய் நேசிக்கும் என் இருதயத்தைப் பார்!. தனக்கென ஒன்றும் வைக்காது தன்னையே வெறுமையாக்கிய இருதயம் தன் அன்பை வெளிப்படுத்த உயிரையே அர்ப்பணித்த இருதயம். அதற்கு கைமாறாக கிடைப்பது என்ன/ பெரும்பாலும் நன்றிகெட்டதனமும், நிந்தை அவமானமும், தேவ துரோகமுமே…

எனக்கென தங்களை நேர்ந்துகொண்டவர்களே இவ்வாறு துன்பம் தருகின்றனர் என்பதே என் இருதயத்திற்கு மிகுதியான வேதனையைத் தருகிறது. இந்த நன்றிகெட்டத்தனத்திற்கு நீயாவது பரிகாரம் செய்ய மாட்டாயா? “ இரக்கத்தோடு கேட்டார் நம் ஆண்டவர்.. ( 1675-ம் ஆண்டில் அர்ச். மார்க்கரீத் மரியம்மாளிடம்…

இதே கேள்வியை நம் ஒவ்வொருவரிடமும் கேட்கிறார்..

“எனக்கென தன்னை நேர்ந்துகொண்டவர்கள்” என்றால்… ஞானஸ்தானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனு(ளு)ம் அதில் அடங்குவார்கள்..

 நம் இதயக் கதவருகே அமர்ந்து, அதை மிக அன்போடு தட்டிக்கொண்டிருக்கும் ஆண்டவரின் குரலை நாம் கேட்கிறோமா? 

பாவக்கடல் பெருகியுள்ள உலகில்… உலகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் உலகில்… தான் தனது… தன்னுடையது மட்டும்தான் முக்கியம் என்று சுய நல வட்டத்திற்குள் வாழும் உலகில்.. நம்முடைய முகம், உள்ளம் எல்லாம் உலகத்தை நோக்கி திரும்பியிருக்க நம் அருகில் ஏக்கத்தோடு நம்மை மட்டுமே நேசித்துக் கொண்டிருக்கும் ஆண்டவரைத் திரும்பிப் பார்க்கக் கூட நமக்கு நேரம் இல்லையே..

ஆண்டவருக்கு ஆறுதல் கொடுத்தல் என்றால் என்ன? ஆறுதல் கொடுத்தல் என்பது ஈடு கட்டுதல் என்ற பொருளில் சிந்திக்க வேண்டும்..

1. ஆண்டவரை விசுவசிக்காதவர்களுக்காக நாம் முழுமையாக ஆண்டவரை விசுவசிப்பது…

2. ஆண்டவரை நம்பாதவர்களுக்காக நாம் முழுமையாக ஆண்டவர் முழௌமையாக நம்புவது..

3. ஆண்டவரை நேசிக்காதவர்களுக்காக நாம் ஆண்டவரை முழுமையாக நேசிப்பது..

4. ஆண்டவர் மேல் பிரமாணிக்கம் இல்லாதவர்களுக்காக நாம் ஆண்டவரிடம் பிரமாணிக்கமாக இருப்பது..

5. கடவுள் காரியத்தில் நம்பிக்கையில்லாமல் நடந்து கொள்பவர்களுக்காக நாம் கடவுளை முழுமைமையாக நம்பி.. நம்மில் ஆண்டவர் எந்த நம்பிக்கை குறைவையும் காணதிருக்க வாழ்வது..

6. ஒழுக்கக் குறைவோடு வாழும் மனிதர்கள் செய்யும் அவமானத்திற்கு பரிகாரமாக நாம் ஒழுக்கத்தோடு நடந்து கொள்வது..

7. பாவத்தினால் ஆண்டவர் அனுபவிக்கும் வேதனைகளுக்கு பரிகாரமாக நாம் பாவங்கள் செய்யாதிருப்பது..

8. அடுத்தவர்கள் செய்யும் தெய்வ நிந்தனை, துரோகங்களுக்கு பரிகாரமாக நாம் அவற்றை நம் வாழ்வில் ஒரு துளி அளவு கூட செய்யாமலிருப்பது…

9. பிறரை நேசிக்காமல் குறைகூறி, அவமானப்படுத்தி வாழ்வோர்களுக்காக நாம் பிறரை நேசிப்பது, அன்பு செய்வது, அவர்களின் பெயரைக் கெடுக்காமல் வாழ்வது..

10. கடவுளை மறுதலித்து,  கடவுள் தேவையில்லை என்று வாழும் மக்களின் செயலுக்கு பரிகாரமாக நாம் கடவுளை முழுமையாக நம்பி, நேசித்து, அன்பு செய்து ஆண்டவரை மகிழ்ச்சிப்படுத்துவது..

மொத்தத்தில் மற்றவர்கள் செய்யும் மேற்கண்ட செயலுக்காக பரிகாரமாக, பதிலாக நாம் ஆண்டவரை நேசிப்பது… மற்றவர்களின் குறைகளை நாம்  நிறைவு செய்து ஈடுகட்டுவது..

இதைத்தான் தேவமாதா செய்தார்கள்.. புனிதர்கள் செய்தார்கள்…

அப்படி ஈடுகட்டும் ஆன்மாக்களைத் தேடித்தான் நம் ஆண்டவரும், நம் தேவ அன்னையும் தேடி வருகிறார்கள்… அவர்களின் தேவ ஸ்நேகத்தால் மற்றவர்களைக் காப்பாற்ற…

சரி.. இப்போது அனைவரையும், தேவ மாதா போலும், புனிதர்கள் போலும் மாறச் சொல்லவில்லை.. அது தான் நம் நோக்கமாக இருக்க வேண்டும்.. அது இருக்கட்டும்..

பலவீனமான நாம்…எளிதில் தவறி விடுகிற நாம்.. பாவத்தில் எளிதாக சிக்கிக்கொள்கிற நாம்… உலக காரியங்களில் எளிதில் மூழ்கிப்போகிற நாம்.. அடுத்தவர் காரியத்தில் அதிகமாக மூக்கை நுழைக்கிற நாம்..

கொஞ்சம் சற்று  நிதானமா நம்மை சிந்திக்க வேண்டும்.. நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? நம்முடைய ஆன்மீக வாழ்க்கை எப்படி இருக்கிறது… ? ஆண்டவர் இயேசுவோடு நம் பயணம் எப்படி இருக்கிறது? முக்கியமாக ஆண்டவர் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கும் நம் ஆன்மா எப்படி இருக்கிறது? என்று ஒரு ஆன்ம சோதனை செய்துவிட்டு… ஆண்டவரை நேசிக்கும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.. அவரோடு உரையாட வேண்டும்.. ஆண்டவருக்கு பிடிக்காத விஷயங்கள் பல நம்மிடம் இருக்கலாம்.. அதை அடையாளம் கண்டு.. நம் ஆண்டவருக்காக அதை விட்டுவிட வேண்டும்.. குறைந்த பட்சம் ஒரு காரியத்தையாவது ஆண்டவருக்காக விட்டு விட வேண்டும் இதுவே நம் ஆண்டவருக்கு தரும் ஆறுதல் பரிகாரம்..

இந்த மாதத்தில் ஆண்டவருடைய திருஇருதய ஜெபங்கள், பிராத்தணைகள், ஜெபமாலைகள் எல்லாம் கண்டிப்பாக தேவை அவைகள் நம்மை ஆண்டவருடைய இருதயத்திற்கு அருகே நம்மை அழைத்துச் செல்ல உதவுக்கின்றன..  ஆனால் அதோடு முக்கியமான விஷயம் நம் நேச ஆண்டவருக்காக நம் பாவங்களை விட்டுவிட வேண்டும்.. இதுவே ஆண்டவருக்கு கொடுக்கும் உண்மையான ஆறுதல்.. உண்மையான“ஈடு செய்தல்”..

அதற்காக முயற்சிகளை இன்றிலிருந்து ஆரம்பிப்போம்…

மேலும் நம் குடும்பங்களை ஆண்டவருடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.. ஆண்டவருடைய திருக்காயங்களுக்குள் முக்கியமாக திருஇருதய காயங்களுக்குள் மறைந்து கொள்வோம் நம் குடும்பத்தோடு…

ஜெப தவ பரிகாரங்கள் செய்து நம் நேச ஆண்டவரின் இருதயத்திற்கு ஆறுதல் அளிப்போம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !