அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-7

மேலும் நால்வராக, இருவராக பல இடங்களில் இருக்கிறார். புனித சந்தியாகப்பரைப் பற்றிய மேலும் சில சுவாரஸ்யமான பகுதிகளை வேதாகமத்தில் பார்க்கலாம்..

புனித இராயப்பர் மாமியாரின் காய்ச்சலை கையைப் பிடித்து இயேசு சுவாமி குணமாக்கிய புதுமை அனைவருக்கும் தெரிந்ததே.. அப்போதும் நம் சந்தியாகப்பர் ஆண்டவரோடும் உடனருந்தார் என்பதும் மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது..

“ பின்னர், அவர்கள் செபக்கூடத்தை விட்டு சீமோன், பெலவேந்திரர் இவர்களுடைய வீட்டுக்கு வந்தார்கள். யாகப்பரும் அருளப்பரும் அவர்களோடு சென்றனர்.

சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தாள். உடனே அவளைப்பற்றி அவரிடம் சொன்னார்கள்.

அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவளை எழுப்பினார். காய்ச்சல் அவளை விட்டுவிட்டது. அவள் அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.” 

மாற்கு 1 : 29-31

இதுவே நம் இயேசு ஆண்டவர் செய்த இரண்டாவது புதுமையாக இருந்திருக்க வேண்டும்..

இயேசு சுவாமி,

“ காலம் நிறைவேறிற்று; கடவுளின் அரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள் “ – மாற்கு 1 : 15

என்று அறிவித்து தனது நற்செய்திப்பணியை துவக்கியதே கலிலேயாவில் இருந்துதான்..

துவக்கிய சில நாட்களுக்குள் முதல் நான்கு சீடர்களை( இராயப்பர், பெலவேந்திரர், யாகப்பர், அருளப்பர்) அழைத்துவிட்டார்..

அதன் பிறகு சிறிது காலத்திற்குள் கானாவூரில் தனது முதல் புதுமையை நிகழ்த்துகிறார்..

அதில் கண்டிப்பாக முதல் நால்வர்கள் இருந்திருப்பார்கள்..

கானாவூர் புதுமை இப்படி முடியும்..

“ இவ்வாறு அவர் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடர் அவரில் விசுவாசங்கொண்டனர்” அருளப்பர் 2 : 11

அதன் தொடர்ச்சியாக..

அவரும், அவருடைய தாயும் சகோதரரும் அவருடைய சீடரும் கப்பர்நகூமிற்குச் சென்றனர். அங்குச் சில நாட்களே தங்கினர் – அருளப்பர் 2 : 12

புனித மத்தேயு நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்.. இயேசு நாதர் சுவாமி நாசரேத்தை விட்டு கப்பர்நகூமிற்கு  வந்து குடியிருந்தார் என்று மத்தேயு 4 : 13-17

எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும் போது.. இயேசு சுவாமியும், நம் தேவமாதாவும் நற்செய்திப்பணிக்காக நாசரேத்தை விட்டு குடிபெயர்ந்து கலிலேயாவில் உள்ள கப்பர்நகூமில் குடியிருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது..

இதில் இன்னொரு உண்மையும், சுவாரஸ்யமும் என்னவென்றால் அதனால்தான் தேவ மாதாவும், இயேசு சுவாமியும் கானாவூர்த்திருமனத்திற்கு அழைக்கப் பெற்றிருக்கிறார்கள்..

அங்குதான் தன் மகனைப் புதுமை செய்ய வைத்து பிரபலியமாக்கி “ மகனே உன் நேரம் வந்துவிட்டது “ என்று சொல்லி பச்சைக் கொடியசைத்து தன் மகனை இத்தரணிக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்கள் நம் அன்னை.

மேலும் பார்க்கும்போது இராயப்பர் வீட்டிலும் நம் தேவமாதா இருந்திருக்க வேண்டும்.. நம் ஆண்டவரின் இரண்டாம் புதுமையிலும் நம் தேவமாதாவின் பரிந்துரை இருந்திருக்க வேண்டும்.. எல்லாமே ஆண்டவருடைய சீடர்கள் அவர் மேல் விசுவாசம் கொள்ளவைக்க நம் தேவமாதாவின் முயற்சியே..

இப்போது நம் யாகப்பரிடம் வருவோம்..

நம் ஆண்டவரின் முதல் வட்டத்திலும், இரண்டாவது வட்டத்திலும் இருந்து ஆண்டவர் செய்த புதுமைகளை நேரடியாக மிக அருகில் இருந்து பார்க்கும், அதை சுவைக்கும் வரத்தை நம் புனிதர் பெற்றிருக்கிறார்..

இது எப்பேர்பட்ட பாக்கியம்.. 

ஜெபம் :

எங்கள் அருமைப் புனிதர் யாகப்பரே ! ஆண்டவருடைய எண்ணற்ற புதுமைகளை நேரடியாகப் பார்த்து அனுபவத்தீரே ! விசுவாசத்தில் வளர்ந்தீரே ! உம்முடைய அனுபவத்தை நாங்கள் பயன்படுத்தி உணர்ந்து ஆனால் காணமல்  நாங்கள் உறுதியாக விசுவசிக்க எங்களுக்கு நெஞ்சுரம் தாரும் பாதுகாவலரே குறிப்பாக திவ்ய நற்கருணை விசுவாசத்தில் வளர..

கடவுளுக்கு சித்தமானால் மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..

படைமிரட்டி புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !