சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 24

ஆயரும் அறிஞரும் கிறீஸ்துவைக் கண்டனர். ஆனால் அவரைக் காணாத ஆயிரக்கணக்கான மக்களை எண்ணிப் பாருங்கள். அக்காலத்தில் மக்கள் நம் காலத்தைப் போன்றே உலகியல் விவேகத்தில் மூழ்கிக் கிடந்தனர். எனவே ஒருவரும் கடவுளைக் காணவில்லை. 

உரோமை பேரரசிலே இளைஞன் பிலாத்துக்கு உண்மை எனப்படும் ஒன்று இல்லை என்று வலியுறுத்த, கடவுளைப்பற்றி கருத்தற்ற (agnostics) பலர் இருந்தனர். அத்தேனிய நகர சந்தையில் மனிதனுக்குக் கடவுள்களின் உதவி வேண்டியதில்லை என்ற தப்பறையைப் பறை சாற்ற மெய்விளக்கக் கட்சியினர் (sophists) அநேகர் இருந்தனர் 

ஒழுங்கீன உலுத்த வாழ்க்கையை விடுதலை உணர்ச்சியின் பெயரிலும், அநியாயத்தை முன்னேற்றத்தின் பெயரிலும் போற்றிப்பாடிய புலவர் பலர் இருந்தனர். ஆனால் இவர்களில் ஒருவற்கேனும் வானவனின் காட்சியோ, நட்சத்திரத்தின் வெளிச்சமோ காணப்படவில்லை. ஏன்? ஏனெனில் ஞானத்தின் அறிவின், குணமளிக்கும் தேவ அருளின், ஈடேற்றத்தின் செல்வங்கள் அறிவு நிலையிலுஞ் சரி, பண்புநெறி நிலையிலுஞ் சரி எதிரிடை முடிபுகளுக்கே நியமிக்கப்பட்டுள்ளன. 

கடவுள் வெறும் குழந்தையாகத் தோன்றிய காலத்து எளிமையும் ஞானமும் போன்ற அறிவு நிலையைச் சார்ந்த எதிரிடை நிலைகளே மாட்டுத் தொழுவத்திற்கு வழி கண்டனர்; கடவுள் மனிதனாக விளங்கிய போது பாவமும் தூய்மையும் போன்ற ஆன்மீக எதிரிடை முடிபுகளே கடவுளின் அடி வணங்க வழி கண்டன 

அர்ச்.அருளப்பரைப் போன்ற தூயவர் அவரை அணுகினர் ஏனெனில் அவர்களை சுத்தமாக்க அவசியமில்லை. அர்ச்.மதலேனாளைப் போன்ற பாவிகள் அவரை நாடினர். ஏனென்றால் அவர்கள் சுத்திகரம் அவசியமானது என்பதை உணர்ந்தார் 

ஆனால் நடுத்தர குழுவினராகிய பரிசேயரோ உணவருந்தும் முன்னர் கைகளைக் கழுவுவதில்லை என்று அவருடைய அப்போஸ்தலர்கள் மீது வசைமாரி பெய்தனர். உள்ளொன்று நினைத்து புறமொன்று நடிக்கும் வெளி பகட்டுக்காரரோ வெளியே சுத்தமாகவும் உள்ளத்திலோ, இறந்தோரின் எலும்புகளை மிகுதியாகக் கொண்ட வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாகவும் விளங்கினர்; 

ஓரளவு கெட்டும் கெடாதும் வாழ்ந்த சுய திருப்தியாளரோ அன்புக் கனல் விட்டு எரியவுமில்லை. குரோதத்தால் குளிர்ந்து இருக்கவுமில்லை. இவர்க ளெல்லாம் திரு இருதயம் உயர்த்திய கைகளுக்கு அடிபணியவில்லை. இத்தகைய மக்களைத்தான் கடவுள் தம் வாயினின்று உமிழ்ந்து எறிகிறார் என்று திருமறை நூல் கூறுகிறது 

தொடரும்...