பாத்திமா காட்சிகள் பகுதி- 23

இன்று பாத்திமா மாதா 1917- மே மாதம் முதல் காட்சி கொடுத்த நாள், இன்று பாத்திமா மாதா திருநாள் மற்றும் தேவ இரகசிய மாதா நாள் ( ஒவ்வொரு மாதம் 13-ம் தேதி தேவ இரகசிய மாதா நாளாக கடைப் பிடிக்கப்படுகிறது..

முதல் செய்தி  :  நம் தேவ அன்னை பாத்திமாவில் காட்சி அளித்தபோது, மக்கள் பாவத்தில் இருந்து மனந்திரும்பவில்லை என்றால் மீண்டும் ஓர் உலகப்போர் தோன்றும் என்றும், காரணமின்றி இரவு வானில் தோன்றும் ஓர் ஒளியே அதற்கு அடையாளமாக இருக்கும் என்றும் கூறினார். அன்னை முன்னறிவித்த அந்தஒளி, 1938 ஜனவரி 25 -ந்தேதி வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம் முழுவதும் ஒளிர்ந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் மூண்டது.

இரண்டாம் செய்தி: தேவ மாதா பாத்திமாவில் காட்சி அளித்த போது ரஷ்யா தனது மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்றும், ரஷ்யா  கம்யூனிசக்கொள்கைகளில் இருந்து மனந்திரும்ப கிறிஸ்தவர்கள் அனைவரும் ஜெபமாலை செபிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 12ம்பயஸ் முதலில் உலகத்தையும், 1952 ஜூலை 7ந்தேதி சாக்ரோவெர்ஜென்ட்டே (SacroVergente) என்ற தனது திருத்தூதுமடல் வழியாக ரஷ்யாவையும் மரியாவின்மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். 1984ல் திருத்தந்தை 2ம்ஜான்பால் உலகத்தை மீண்டும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். 1990களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்பியது.

(இருப்பினும் அன்னை கேட்டுக்கொண்டபடி உலக ஆயர்களோடு சேர்ந்து ரஷ்யாவை மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு இன்னும் ஒப்புக்கொடுக்கப்படவில்லை)

மூன்றாம் செய்தி: மகா பரிசுத்த மாதா பாத்திமாவில் காட்சி அளித்தபோது, இறுதி காலத்தில் மக்கள் கடவுளை மறந்து தீயவழிகளில் ஆர்வமாக இருப்பார்கள் என்றும், தீவிரவாதமும், வன்முறைகளும், பயமும் அதிகரிக்கும் என்றும், கத்தோலிக்க திருச்சபையும் திருத்தந்தையும் அதிகம் துன்புறவேண்டியிருக்கும் என்றும், கடவுள் பல்வேறு துன்பங்களை உலகில் அனுமதிப்பார் என்றும்,உண்மைகடவுள் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோர் அழிவில் இருந்து தங்களை காத்துக்கொள்வர் என்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றிபெறும் என்றும் அறிவித்தார்.

இந்த இரகசியங்கள் லூசியா சான்ட்டோசின் குறிப்புகளின்படி, கத்தோலிக்க திருச்சபையால் வெளியிடப்பட்டன. இந்த மூன்று இரகசியங்களைத் தவிர மற்றும் சிலசெய்திகளையும் அன்னை வழங்கினார். ஜெசிந்தாவும், பிரான்சிஸ்கோவும், சிறுவயதிலேயே இறந்துவிடுவர் என்றும், தனது செய்தியைப் பரப்ப லூசியா பல ஆண்டுகள் உயிரோடு இருப்பார் என்றும் மரியன்னை முன்னறிவித்திருந்தார். அதுவும் அவ்வாறே நிகழ்ந்தது.

1981 மே 13-ம் தேதி பாத்திமா அன்னையின் திருவிழா அன்று, திருத்தந்தை 2ம்ஜான்பால் அலிஆக்கா என்ற துருக்கிய இளைஞனால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, தான் அன்னையின் கரங்களால் பாதுகாக்கப்பட்டதை உணர்ந்ததாக அவர்கூறினார். அவரது உடலில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா, பின்புபாத்திமா அன்னையின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. திருத்தந்தை 2ம்ஜான்பால் துப்பாக்கியால் சுடப்பட்ட இந்தசம்பவம், திருச்சபை துன்புறுத்தப்படும் என்ற மாதாவின் அறிவிப்பின் நிறைவேறுதலின் ஒரு பகுதியாக இருந்தது.

ஆனால் நாம் இப்போது இருப்பது மாதாவின் மூன்றாம் செய்தி காலத்தில்தான். நன்றாக மூன்றாம் செய்தி காலத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப்பாருங்கள் புரியும். மேலும் நாம் இப்போது இருப்பது திருவெளிப்பாட்டின் 12-ம் அதிகாரத்தில். அதிலும் 17- ம் வசனத்தில் வசனத்தில் அலகை மாதாவின் எஞ்சிய பிள்ளைகளோடு போர் புரியும் காலம்..

நம் இயேசு தெய்வம் கூறிய வார்த்தைகள் “ இறுதிவரை நிலைத்து நிற்பவன் பேறு பெற்றவன் “ இதை ஒவ்வொருவரும் தன் வாழ்வில் கடைபிடிக்கிறோமா? இருப்போமா? தங்கள் நெஞ்சில் கை வைத்து உறுதி செய்வோம்.

இப்போதைய தேவைகள் தகுதியான உள்ளத்தோடு அதிகமாக திருப்பலியில் பங்கேற்று நம் திவ்ய நற்கருணை நாதரை உட்கொண்டு (ஊரடங்கிற்கு பின்) அவருக்கு அன்பும் ஆறுதலும் அளித்தல். அதிகமாக ஜெபமாலை ஒப்புக்கொடுத்தல், குடும்ப ஜெபமாலை ஜெபித்தல், அதிகமாக தவங்களும், ஒறுத்தல் முயற்சிகளும் தேவை (ஜெப தவ பரிகார பக்தி). இதை செய்தால்  நம் மூவொரு கடவுள் தன் பாரமான கரத்தை உலகத்தை நோக்கி அழுத்தாமல் நிறுத்தலாம். 

மேலும் ஒவ்வொரு மாதமும் 13- தேதி தேவ இரகசிய மாதா நாள் நமக்கு உணர்த்தும் செய்தி “ ஜெபம், தவம், பரிகாரம் “ அன்றைய நாளில் வழக்கத்தை விட அதிக ஜெபமாலைகள் ( குறைந்தது 153 மணிகள்) ஜெபித்து நம்மால் முடிந்த தவ, பரிகார செயல்களை செய்து அன்னையின் மாசற்ற்

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !