அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-19

சந்தியாகப்பரின் வேதசாட்சிய மரணத்திற்குப் பின் அவர் திருச்சரீரத்தைக் காணவில்லை..

ஏரோது அகரிப்பாவால் வாளால் வெட்டி (சிரசை) கொல்லப்பட்ட புனித யாகப்பரின் திருவுடல் ஜெருசலேமில் காணப்படவில்லை. அவரது திருவுடல் வானதூதர்களால் யாரும் பார்க்கமுடியாத படகில் யூதேயாவிலிருந்து ஸ்பெயின் தேசம் கலிசியா என்ற இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.. 

சந்தியாகப்பர் வேதசாட்சி மரணம் ஏற்படுத்திய புரட்சி மற்றும் அற்புதங்கள்..

புனித சந்தியாகப்பரின் திருஇரத்தம் பூமியை நணைத்ததும் அநேக அற்புதங்கள் நடந்தன. மக்கள் பொருத்தனை செய்து அவரை வணங்கி மன்றாடினார்கள் என்றால் எப்படிபட்ட அற்புதங்கள் நிகழ்ந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்ப்புக்கு பின்னர் நிலவி வந்த மாபெரும் நிசப்தம், புனித யாகப்பரின் வேதசாட்சி மரணத்தால் உடைந்தது..தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்ல பயந்தவர்கள் தைரியமாக சொல்ல தங்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.. ஒரு மாபெரும் கிறிஸ்தவ புரட்சி வெடித்தது.... இவையனைத்தும் ஆண்டவராகிய இயேசு தூய சந்தியாகப்பருக்கு கொடுத்த மகிமை..ஏன் தூய சந்தியாகப்பர் தான் இயேசுவிடம் அளித்த வாக்குறிதியின்படி அவர் கிண்ணத்தில் அதுவும் அப்போஸ்தலர்களில் முதன் முதலாக குடித்துக்காட்டியதால் அவருக்கு இந்த மகிமை கிடைக்கிறது..

இங்கே இப்படி இருக்க.. அவர் திருச்சரீரம் கண்டெடுக்கப்பட்ட கலீசீயா கடற்கரையிலும் அற்புதங்கள் தொடர்கிறது..

அவர் திருச்சரீரம் பாறைகளால் சூழப்பட்ட கலிசீயா கடற்கரையில் அவர் சீடர்களால் கண்டெடுக்கப்பட்டது..பின்பு அங்கு அவரை அடக்கம் செய்ய அவர்கள் சீடர்கள் முயற்சி செய்த போது அங்கு ஆட்சி செய்த அரசி மறுக்க அங்கும் அற்புதங்கள் தொடர்கிறது.. இது காணாது என்று அவர் சீடர்களும் அற்புதத்தை நிகழ்த்துகிறார்கள். 

பின்பு அந்த ராணி மனமாற்றம் அடைந்து புனித யாகப்பரின் திருவுடலை அடக்கம் செய்ய அனுமதித்ததோடு தானும் கிறிஸ்தவளாகி கிறிஸ்தவமத்திற்கு அங்கிகாரம் வழங்கிறார்..

ஆனால் அதன் பின் அவர் கல்லறை மறக்கப்பட்டுவிட்டது.. அதுவும் ஆண்டவர் திட்டமே.. கிட்டதட்ட எட்டு நூற்றாண்டுகள் மறக்கப்பட்டுவிட்டது..

அதன் பின்பு அவர் கல்லறை அற்புதமாக கண்டுபிடிக்கப்பட்ட விதமும்...அவர் திருக்கல்லறையில் ஆலயம் எழுப்பப்பட்டதும்..அந்த இடத்திற்கு“ Santiago The Compostela “  என்று பெயர் வந்ததும் அடுத்த பகுதியில் பார்போம்..

ஜெபம் : அப்போஸ்தலர்களில் முதல் வேதசாட்சியான எங்கள் அருமை அப்போஸ்தலர் சந்தியாகப்பரே !..

“ நீ என்னை மகிமைச் செய்ய செய்ய நான் உன்னை மென்மேலும் மகிமைப்படுத்துவேன்” என்ற வாக்கிற்கு ஏற்ப ஆண்டவர் இயேசுவால் மகிமைப்படுத்தப்பட்ட புனித யாகப்பரே !

உம் இறப்பிற்குப் பின் நிகழ்ந்த அற்புதங்களும், கிறிஸ்தவ புரட்சியும் உம் வீரமிக்க ஆர்வமிக்க மகிழ்ச்சி மிக்க வேதசாட்சியத்தை அழுத்தத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.. நீர் ஆண்டவர் இயேசுவின் மேல் கொண்டிருந்த அளப்பரிய அன்பும், நேசமும் இதனால் புலனாகிறது..

உம்மைப்போல் எங்களுக்கும் வீர மிக்க விசுவாச வாழ்வை கொடுத்தருளும்.. நோய்க்கு பயந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை காட்டிக்கொடுக்கும் மன நிலையைத் தகர்த்தருளும்..

உம்மைப் போல் எங்களுக்கும் வீரமும், விசுவாசமும் இருந்தால் திவ்ய நற்கருணை ஆண்டவரை காட்டிக்கொடுக்க மாட்டோம்.. எங்களுக்கு அத்தகைய மன நிலையைத் தாரும் படை மிரட்டி புனித சந்தியாகப்பரே ! ஆமென்..

கடவுளுக்குச் சித்தமானால் மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..\

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !