மனுமகன் சேசு பாகம் - 18

“இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்; எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்”

லூக்காஸ் 2 : 34

யாருக்கெல்லாம் நம் ஆண்டவர் வீழ்ச்சியாக இருந்தார்..

“ வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு!

ஏனெனில், மனிதர் விண்ணரசில் நுழைகையில் வாயிலை அடைத்துவிடுகிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை. நுழைவோரையும் விடுவதில்லை”.

மத்தேயு 23 : 13-14

“குருட்டு வழிகாட்டிகளே உங்களுக்கு ஐயோ கேடு “

மத்தேயு 23 16

“மூடரே, குருடரே எது பெரிது? பொன்னா? பொன்னை பரிசுத்தமாக்கும் ஆலயமா?”

மத்தேயு 23 : 19

“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு ! ஏனெனில் வெள்ளையடித்த கல்லறைக்கு நீங்கள் ஒப்பானவர்கள் “

மத்தேயு 23 : 27

“ பாம்புகளே, விரியன் பாம்புக்குட்டிகளே, நீங்கள் நரகத்தீர்வைக்கு எப்படித் தப்ப முடியும்?”

மத்தேயு 23 : 33

“ கெட்டுப்போன விபச்சாரத் தலைமுறை அறிங்குறி ஒன்று கேட்கிறது “

மத்தேயு 12 : 39

ஆண்டவர் வீழ்ச்சியாக இருந்தது இவர்களுக்குத்தான்..

மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் தலைமைக் குருக்கள்..

இவர்கள் எண்ணங்கள் எப்படி இருந்தது?

1. கடவுள் இவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்தார்கள்.

2. இவர்கள் சாதாரன மக்களை விட மிகவும் மேன்மைக்குரியர்வர்கள் என்று நினைத்தார்கள்.

3. கடவுளுக்கு அருகில் இவர்கள் இருப்பதாக நினைத்தார்கள்..

4. கடவுளிடமிருந்து எல்லா ஆசீரையும் இவர்களே வாங்கிக் கொடுப்பதாக நினைத்தார்கள்..

5. கடவுள் இவர்களிடம் மட்டும்தான் பேசுவார் என்று நினைத்தார்கள்..

6. அவர்கள் தங்களை நீதிமான்கள் என்று நினைத்தார்கள்.

7. இவர்களைத் தவிர மற்ற எல்லோரும் பாவிகள் என்று நினைத்தார்கள்..

8. கடவுளையும் மனிதர்களையும் இனைக்கும் பாலங்கள் தாங்கள்தான் என்று நினைத்தார்கள்..

9. மற்றவர்களை மிகவும் தாழ்வாக நினைத்தார்கள்.. கடவுள் முன் அனைவரும் சமம் என்பதை மறந்தார்கள்..

10. சட்டங்களை கடைப்பிடித்தால் மட்டும் போதும் அதுவே கடவுளுக்கு உகந்த செயல் என்று நினைத்தார்கள்.. 

11. அகங்காரம், கர்வம் கொண்ட சிந்தனைகள் இன்னும் எத்தனையோ..

இவர்கள் செயல்கள் எப்படி இருந்தது..

1. வெளிப்பார்வைக்கு தங்களை நல்லவர்கள், யோக்கியர்கள் என்று காட்டுவதில்..

2. பொது அடங்களில் முதன்மை இடங்களைத் தேடுவது..

3. உயர்வாக ஆடைகள், அங்கிகள் தரிப்பதில் பெருமை காண்பது..

4. சட்டங்களை கூட்டி பெருக்கி வகுத்து அதிகரித்து மக்களை வாட்டி வதைப்பது..

5. அகத்தைப் பற்றி கவலைப் படாமல் வெளிவேடங்களில் கவனத்தை செலுத்தியது..

6. அன்பை கடைப்பிடிக்கவும், போதிக்கவும் செய்ய இல்லை..

7. கடவுளை ஒழுங்காக அறிவிக்கவில்லை.. உண்மையான நற்செய்திப் பணி செய்யவில்லை..

8. மக்கள் முன்னிலையில் தங்களைப் பெருமைக் குரியவர்களாக காட்டிக் கொள்வது.. பெருமை பேசுவது..

9. இரக்கம் இல்லாமல் நடந்து கொள்வது என்று சொல்லிக் கொண்டே போகலாம்..

இவர்களையே இயேசு சுவாமி எதிர்த்தார்.. சொல்லிக் கொடுத்துப்பார்த்தார்.. திருத்த முயற்சி செய்தார்.. எப்படியாவது கடவுளுக்குள் கொண்டுவர வேண்டும் என்று முயற்சி செய்தார்..

ஆனால் அதற்கு அவர்கள் தயாராக இல்லை.. ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை..

ஆண்டவரின் வார்த்தையை உள்வாங்காமல் செவிக்குள்ளோ மனதிற்குள்ளோ நுழைய விடாமல் வாசலிலேயே தடுத்துவிட்டார்கள்..

அதற்கு ஒரே ஒரு காரணம்தான் காரணம்..

தாழ்ச்சி இல்லாதது மற்றும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவ குணம்..

இது இருந்தால் அவர்கள் எப்பேர்பட்ட நிலையில், அதிகாரத்தில், பொறுப்பில் பதவியில் இருந்தாலும் அவர்களால் கடைசிவரை அவர்களால் மனம் மாறவே முடியாது..

இப்படிப் பட்டவர்கள்தான் பெரிய ரிஸ்க்கில் இருக்கிறார்கள்..

அவர்கள் கடவுளில் தாங்கள்தான் எழுச்சி மிக்கவர்களாக இருக்கிறோம்..

இயேசுதான் வீழ்ச்சியடையப்போகிறார்.. நாங்கள்தான் அவரை வீழ்த்தப்போகிறோம் என்று நினைத்தார்கள்..

ஆனால் ஆண்டவர் இயேசு அவர்களுக்கு வீழ்ச்சியாக அமைந்துவிட்டார்..

எழுச்சிக்கு போவதற்கு முன்..

இதே குணம் நம் குடும்பங்களில், பங்கில், அமைப்புகளில், சமூகங்களில் இருந்தால் அவர்கள் எப்பேர்பட்ட அதிகாரத்தில், பொறுப்பில், தலைமையில் இருந்தாலும் அவர்கள் வீழ்ச்சி அடைவது உறுதி.. அந்த வீழ்ச்சியையம் கொடுக்கப்பப்போவது இயேசுவே..

ஏனென்றால் அவருக்கு வேறு வழியில்லை..

அவரும் அவர்களோடு எத்தனையோ முறை பேசிக்கொண்டுதான் இருக்கிறார்..

அவர்களும் கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.. ஆலயத்தில் திருப்பலியில், ஜெபங்களில், தியானங்களில் அல்லது அடுத்தவர் மூலமாகவாவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..

ஆனால் அவைகளை உள்ளே செல்ல விடாமால் அகங்காரமும், தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் மட்டும்தான் சுத்தவான் என்ற எண்ணம் கடவுளின் வார்த்தைகளை வாசலியே திருப்பி விடுகிறது..

அதனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னால் வீழ்ச்சி அடைகிறார்கள்..

தாழ்ச்சியும் கீழே உள்ள வார்த்தையும் உள்ளே சென்றால்தான் அந்த வீழ்ச்சி எழுச்சியாக அமையும்..

“ நம்மிடம் பாவல் இல்லை என்போமாகில் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம். உண்மை என்பது நம்மிடம் இல்லை.”

 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், அவரைப் பொய்யராக்குகிறோம். அவரது வார்த்தை நம்முள் இல்லை.”

1 அரு 1 : 8 & 10

நாம் வீழ்ச்சியடைய இருக்கிறோமா? அல்லது எழுச்சியடைய இருக்கிறோமா?

இரண்டுமே இயேசுவால் நமக்கு நடக்க இருக்கிறது..

எதை நாம் தேர்வு செய்வோம்..

அது எழுச்சியாக இருக்கட்டும் என்ற சிந்தனையோடு கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !

மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !